மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்தில் உள்ள 35ஆம் கிராமம் கண்ணபுரத்தில் வெள்ளிக்கிழமை (21) தொல்பொருள் திணைக்களம் நட்ட பெயர் பலகையினை அகற்றிய பிரதேசசபை தவிசாளர் உப தவிசாளர் உறுப்பினர்களும், கிராம பொதுமக்களும் தலையீட்டினால் நிறுத்தப்பட்டன.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர் வி.மதிமேனன்,மன்முணை தென்எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் வினோராஜ்,போரதீவுப்பற்று பிரதேசசபையின் உப தவிசாளர் த.கயசீலன் மற்றும் பிரதேசசபையின் உறுப்பினர்கள் கிராமத்து பொதுமக்கள் வருகை தந்தனர்.
போரதீவுப்பற்று பிரதேசசெயலகம் சென்ற தவிசாளர்கள் உறுப்பினர்கள் பொதுமக்கள் சென்று உதவிப் பிரதேசசெயலாளருடன் பேசி அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.