மிரிஹான, கிம்புலாவல பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது, போதைப்பொருள் வைத்திருந்ததாக ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட 31 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மிரிஹான பொலிஸாரும் மிரிஹான பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து இசை நிகழ்ச்சி நடைபெற்ற “கமதா” மைதானத்தில் நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சந்தேக நபர்களிடம் பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.