கனேடிய மக்கள் மெட்ரோ ரயில்களிலும் பொதுப் போக்குவரத்து இடங்களிலும் வெளிப்படையாக போதைப்பொருள் பாவனை இடம்பெறுவதால் பாரியளவிலான இன்னல்களுக்கு ஆளாகியுள்ளார்கள் என ஒன்ராறியோ முதல்வர் டக் பேர்ட் சமூக வலைத்தளத்தில் தனது கருத்தினைப் பகிர்ந்துள்ளார்.
அதனால் தான் சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுத்து போதையில் வாழ்கின்ற மக்களுக்கு அதிலிருந்து நிரந்தர விடுதலையைப் பெற உதவும் சிகிச்சை மையங்களுக்கு அரை பில்லியன் டொலருக்கும் மேற்பட்ட முதலீட்டை செய்திருக்கின்றோம் என்பதோடு இதன் மூலம் ஒன்ராறியோவில் வசிக்கும் மக்களைப் பாதுகாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.