பிலியந்தலை, போகுந்தர பகுதியில் இரண்டு கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொரட்டுவை பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினர் நடத்திய சோதனையின்போதே இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 2 கிலோகிராம் 106 கிராம் ஹெரோயின், 478 கிராம் ஐஸ் மற்றும் போதைப்பொருளை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் போன்றவற்றையும் விசேட அதிரடிப்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
வெளிநாட்டில் தலைமறைவாகியிருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான களுபோவில அவிஷ்கவின் உதவியாளரான களுபோவில சுட்டி மற்றும் அவரது மூத்த சகோதரருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
24 மற்றும் 25 வயதுடைய சந்தேக நபர்கள் பிலியந்தல பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் அவர்கள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் மேலதிக விசாரணைகளுக்கா ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.