போதைப்பொருள் கடத்தல் தலைவர் “எல் மென்சோ” மெக்சிகோவில் சுட்டுக்கொலை!

மெக்சிகோவினால் தேடப்பட்டு வந்த மிக முக்கியமான போதைப்பொருள் கடத்தல் தலைவனும், ‘ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன்’ (CJNG) என்ற கடத்தல் கும்பலின் தலைவனுமான நெமேசியோ ஒசெகுவேரா செர்வாண்டஸ் (Nemesio Oseguera Cervantes) பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

“எல் மென்சோ” (El Mencho) என்று பரவலாக அறியப்படும் இவர் கொல்லப்பட்டதை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்த விரிவான விபரங்கள் வருமாறு:

மெக்சிகோவின் ஜாலிஸ்கோ மாநிலத்திலுள்ள தபால்பா (Tapalpa) நகரில் “எல் மென்சோ” மறைந்திருப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இராணுவத்தினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். இதன்போது இராணுவத்தினருக்கும் போதைப்பொருள் கும்பலுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சமர் இடம்பெற்றது.

இந்த மோதலில் எல் மென்சோவின் ஆதரவாளர்கள் நால்வர் கொல்லப்பட்டனர். மூன்று இராணுவத்தினர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த எல் மென்சோ, மேலதிக சிகிச்சைக்காக தலைநகர் மெக்சிகோ சிட்டிக்கு கொண்டு செல்லப்படும் வழியில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

இந்த விசேட தேடுதல் நடவடிக்கைக்கு அமெரிக்கா வழங்கிய புலனாய்வுத் தகவல்கள் பெரும் உதவியாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. எல் மென்சோவை கைது செய்ய உதவுபவர்களுக்கு அமெரிக்கா பல மில்லியன் டொலர்களை வெகுமதியாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

CJNG கும்பல் தலைவன் “எல் மென்சோ” கொல்லப்பட்ட செய்தியையடுத்து CJNG கும்பலின் உறுப்பினர்கள் மெக்சிகோவின் எட்டு மாநிலங்களில் வன்முறையில் ஈடுபட்டனர்.

வீதிகளில் வாகனங்களுக்குத் தீ வைத்தும், வீதித் தடைகளை ஏற்படுத்தியும் பாதுகாப்புப் படையினர் மீது அவர்கள் தாக்குதல்களை நடத்தினர். இதனால் மெக்சிகோவின் பல பகுதிகளில் தற்போது பதற்றமான சூழல் நிலவுகிறது.

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய