மோதரை பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான வெல்லே சாரங்க விச்சாயாவின் உதவியாளர் ஒருவர், கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஐஸ் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர் பல கொலைகளுடன் தொடர்புடையவர் ஆவார்.
சமித்புர, மட்டக்குளியாவைச் சேர்ந்த (25 வயது) இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் கைது செய்யப்பட்டபோது சந்தேக நபரிடம் சுமார் 27 கிராம் ஐஸ் போதைப்பொருள் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நான்கு கொலைகளிலும் தொடர்புடையவர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
2022 ஆம் ஆண்டு கிராண்ட்பாஸ் மஹவத்த பகுதியில் ஒருவரைக் கொன்று களனி ஆற்றில் வீசியது, 2023 ஆம் ஆண்டு சமிட்புர பகுதியில் ஒரு பெண்ணை கத்தியால் குத்திக் கொன்றது, அதே ஆண்டில் அலிவத்த பகுதியில் கூரிய ஆயுதங்களால் ஒருவரைக் குத்திக் கொன்றது, அதே ஆண்டில் பேருவளை பகுதியில் கூரிய ஆயுதங்களால் ஒருவரைக் குத்திக் காயப்படுத்தியது, 2025 ஆம் ஆண்டு வத்தளை பகுதியில் ஒருவரை கூரிய ஆயுதங்களால் குத்திக் கொன்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.