போட்டி அட்டவணையை தொடர சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானம்

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணத்திற்கான போட்டி அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு நடைபெறும் எனவும் பங்ளாதேஷ் அணியின் போட்டிகள் திட்டமிட்டவாறு இந்தியாவில் நடைபெறும் எனவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை புதன்கிழமை (21) மாலை உறுதிப்படுத்தியது.

பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தனது போட்டிகளை இலங்கைக்கு மாற்றக் கோரியதைத் தொடர்ந்து, எதிர்கால வழிமுறை குறித்து கலந்தாலோசிக்க கூட்டப்பட்ட ஐசிசி பணிப்பாளர்கள் சபை கூட்டத்திற்குப் பிறகு வீடியோ-கலந்துரையாடல் மூலம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதென ஐசிசி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் போட்டி நடைபெறும் எந்த இடங்களிலும் பங்களாதேஷ் வீரர்கள், ஊடகவியலாளர்கள், அதிகாரிகள் மற்றும் ரசிகர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதை குறித்த சுயாதீன மதிப்பாய்வுகள் உட்பட நடத்தப்பட்ட அனைத்து பாதுகாப்பு மதிப்பீடுகளையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

உலகக் கிண்ணம் நெருங்கிவரும் காலப்பகுதியில் மாற்றங்களைச் செய்வது சாத்தியமில்லை என்றும், நம்பக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லாத சூழ்நிலையில் அட்டவணையை மாற்றுவது எதிர்கால ஐசிசி நிகழ்வுகளின் மகத்துவத்தை பாதிப்பதுடன் உலகளாவிய நிர்வாக அமைப்பாக அதன் நடுநிலைமையைக் குறைத்து மதிப்பிடச் செய்துவிடும் என்ற ஒரு நிலையை ஏற்படுதக்கூடும் என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது.

இந்த முட்டுக்கட்டையைத் தீர்க்கும் முயற்சியில், பங்களாதேஷ் கிரிக்கெட் சபையுடன் ஐ.சி.சி நிர்வாகம் தொடர்ச்சியான கடிதத் தொடர்புகளில் மற்றும் சந்திப்புகளில் ஈடுபட்டது. அத்துடன் போட்டிகளுக்கான பாதுகாப்புத் திட்டம் குறித்த விரிவான தகவல்களையும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையுடன் ஐசிசி பகிர்ந்து கொண்டது. இதில் கூட்டாட்சி மற்றும் மாநில சட்ட அமுலாக்கல் ஆதரவு ஆகியவை அடங்கும்.

இது தொடர்பாக ஐ.சி.சி. பேச்சாளர் தெரிவிக்கையில்,

‘கடந்த பல வாரங்களாக, போட்டியில் பங்களாதேஷின் பங்கேற்பை தெளிவான நோக்கத்துடன் உறுதிப்படுத்துவதற்காக, பங்களாதேஷ் கிரிக்கெட் சபையுடன் நிலையான மற்றும் ஆக்கபூர்வமான உரையாடலில் ஐசிசி ஈடுபட்டது. இந்த காலகட்டத்தில், ஐ.சி.சி சுயாதீன பாதுகாப்பு மதிப்பீடுகள், விரிவான திறந்தவெளி பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் வரவேற்பு நாட்டின் (Host country) அதிகாரிகளிடமிருந்து முறையான உத்தரவாதங்கள் உள்ளிட்ட விரிவான உள்ளீடுகளைப் பகிர்ந்து கொண்டது. இவை அனைத்தும் இந்தியாவில் பங்களாதேஷ் அணியினரின் பாதுகாப்பு அல்லது உயிர்களுக்கு நம்பக்கூடிய அல்லது உறுதிப்படுத்தக்கூடிய அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று தொடர்ந்து முடிவு செய்தன.

‘இந்த முயற்சிகளுக்கு மத்தியிலும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தனது நிலைப்டில் தொடர்ந்து பிடிவாதமாக இருந்தது. போட்டியில் பங்கேற்பதை அதன் வீரர்களில் ஒருவரின் உள்நாட்டு லீக்கில் ஈடுபடுவது தொடர்பான ஒற்றை, தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் தொடர்பில்லாத சம்பவத்துடன் மீண்டும் மீண்டும் தொடர்பு படுத்தியது. இது போட்டியின் பாதுகாப்பு கட்டமைப்பிலோ அல்லது ஐ.சி.சி ஆடவர் ரி20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதை நிர்வகிக்கும் நிபந்தனைகளிலோ எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

‘ஐ.சி.சி.யின் இடம் மற்றும் திட்டமிடல் முடிவுகள் புறநிலை அச்சுறுத்தல் மதிப்பீடுகள், வரவேற்பு நாட்டு அதிகாரிகளின் உத்தரவாதங்கள் மற்றும் போட்டியின் ஒப்புக்கொள்ளப்பட்ட பங்கேற்பு விதிமுறைகள் ஆகியவற்றால் வழிநடத்தப்படுகின்றன, அவை உலகக் கிண்ணத்தில் பங்குபற்றும் 20 அணிகளுக்கும் ஒரே விதமாகப் பொருந்தும். பங்களாதேஷ் அணியின் பாதுகாப்பைப் பாதிக்கும் எந்தவொரு சுயாதீனமான பாதுகாப்பு கண்டுபிடிப்புகளும் இல்லாத நிலையில், ஐ.சி.சி. போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற முடியாது. அவ்வாறு செய்வது உலகெங்கிலும் உள்ள மற்ற அணிகள் மற்றும் ரசிகர்களுக்கு குறிப்பிடத்தக்க தளவாட மற்றும் திட்டமிடல் விளைவுகளை ஏற்படுத்தும். மேலும் ஐ.சி.சி நிர்வாகத்தின் நடுநிலைமை, நியாயத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஆபத்துடன் கூடிய நீண்டகால சவால்களையும் உருவாக்கும்.

‘ஐ.சி.சி நல்லெண்ணத்துடன் செயல்படுவதற்கும், நிலையான தரநிலைகளை நிலைநிறுத்துவதற்கும், உலகளாவிய விளையாட்டின் கூட்டு நலன்களைப் பாதுகாப்பதற்கும் உறுதிபூண்டுள்ளது’ என்றார். –

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

man

கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு

March 3, 2026

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும்

shabana

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

March 3, 2026

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா

nec

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை – ரஷ்யா

March 3, 2026

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு

tea

கல்வி நிர்வாக சேவையை சேர்ந்தவர்களுக்கான அதிபர் பதவிகளைப் பொறுப்பேற்க தயங்கும் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள்?

March 3, 2026

கல்வி நிர்வாக சேவையை சேர்ந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அதிபர் பதவிகளுக்கு, அச்சேவையைச் சேர்ந்த பெரும்பாலான அதிகாரிகள் விண்ணப்பிக்க முன்வரவில்லை என்று ஆசிரியர்

d

நாட்டின் பிரதம நீதியரசர் மன்னாருக்கு விஜயம்

March 3, 2026

ட்டின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன உத்தியோகபூர்வ பயணமாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) காலை மன்னாருக்கு விஜயம்

nan

‘சாகர’, ‘நந்திமித்திர’ கப்பல்கள் இலங்கையை வந்தடைந்தன!

March 3, 2026

இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு அருகிலுள்ள கிழக்கு இந்தியப் பெருங்கடல் கடற்கரையை மையமாக கொண்டு பெப்ரவரி 18 முதல் 26 வரை

iran

ஈரானில் இதுவரை 787 பேர் உயிரிழப்பு – செஞ்சிலுவைச் சங்கம்

March 3, 2026

ஈரான் மீது இடம்பெற்ற அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்களின் விளைவாக இதுவரை 787 பேர் உயிரிழந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தகவல்

cham

பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகத்தின் பணி இடைநிறுத்த விவகாரம்: ரிட் மனு மார்ச் 18 இல் விசாரணைக்கு!

March 3, 2026

எவ்வித நியாயமான விசாரணையுமின்றி தனது பணி இடைநிறுத்தப்பட்ட தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யும் ரிட் உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்றத்தின்

amazo

அமேசான் நிறுவனத்தின் பல தரவு மையங்கள் மீது ட்ரோன் தாக்குதல்

March 3, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழலுக்கு மத்தியில், உலகின் முன்னணி கிளவுட் சேவை வழங்குநரான அமேசான் நிறுவனத்தின் பல

masoo

அரசாங்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் வழமை போன்று இடம்பெறுகின்றன – ஈரான் ஜனாதிபதி

March 3, 2026

தனது நாட்டுக்கு எதிரான போர் தீவிரமடைந்து வருகின்ற போதிலும், அரசாங்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் வழமை போன்று இடம்பெற்று வருவதாக ஈரான்

Ruvan Ranasinga

சுற்றுலாப் பயணிகளின் வருகை சரிவு?

March 3, 2026

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் வருகை இலக்குகளை அடைய முடியவில்லை