இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரில், நொட்டிங்ஹாம் பொரெஸ்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தோற்றது.
பொரெஸ்ட் சார்பாக கலும் ஹட்சன்-ஒடோய் இரண்டு கோல்களையும், இப்ராஹிம் சங்கரே ஒரு கோலையும் பெற்றனர்.
இதேவேளை சதர்லேண்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் நியூகாசில் யுனைட்டெட் தோற்றது. சதர்லேண்டுக்கு கிடைக்கப் பெற்ற கோலானது ஓவ்ண் கோல் முறையில் கிடைக்கப் பெற்றிருந்தது.