பொருளாதாரத் தடையிலிருந்து புத்தகத் தடை வரை: தமிழ் இனத்தின் மீதான தொடரும் அடக்குமுறைகளை நிறுத்து – கிளிநொச்சி ஊடக அமையம்

இலங்கையில் சிறுபான்மை தமிழ் மக்கள் மீது முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான அடக்குமுறைகளின் ஒரு அங்கமாக, தற்போது தமிழ்
எழுத்தாளர்களின் படைப்புகள் மற்றும் நூல்கள் மீது இலங்கை அரசு விதித்து வரும் தடைகளை கிளிநொச்சி ஊடக அமையம் வன்மையாகக் கண்டிக்கிறது. இது மிக
மோசமான ஜனநாயக மறுப்பு மாத்திரமன்றி, தமிழ் இனத்தின் சிந்தனைச் சுதந்திரத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள பண்பாட்டு யுத்தமாகும். எனகிளிநொச்சி ஊடக அமையம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்த காலத்தில் தமிழ் மக்கள் மீது பொருளாதாரத் தடை, மருந்துத் தடை, விவசாயத் தடை என வாழ்வாதாரத்தின் மீது தாக்குதல் நடத்திய பேரினவாத அரசு, யுத்தம் முடிவடைந்த பின்னரும் தடைகளைத்
தொடர்ந்த வண்ணமே உள்ளது. தமிழ் மக்கள் தமது இறந்த உறவுகளை நினைவுகூரத் தடை, ஜனநாயக ரீதியாகப் போராடத் தடை, சொந்த நிலங்களில் வாழ்வதற்குத் தடை என நீண்டு செல்லும் இந்த வரிசையில், இப்போது தமிழ் எழுத்தாளர்களின்
‘எழுத்துச் சுதந்திரமும்’ நசுக்கப்படுகின்றது.
கிளிநொச்சி எழுத்தாளர் தீபச்செல்வனின் பயங்கரவாதி, சயனைட் ‘எழுத்தால்
நான் யுத்தம் செய்கின்றேன்’ நூல்கள் தடுத்து வைக்கப்பட்டன, பின்னர் பயங்கரவாதி, சயனைட் நூல்கள் விடுவிக்கப்பட்டு எழுத்தால் நான் யுத்தம்
செய்கின்றேன்’ நூல் இன்றுவரை சுங்கப் பிரிவினால் விடுவிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், எழுத்தாளர் சோபாசக்தியின் ‘லைடன்தீவு-மண்டைதீவு படுகொலைகளும் புதைகுழிகளும்’, பி. இரயாகரனின் ‘அரசியல் அநாதைகள்’, ம. மதிவண்ணனின் ‘நெரிந்து’, டிலுக்சன் மோகனின் ‘படுபட்சி’ உள்ளிட்ட மிக முக்கியமான
நூல்கள் அரசினால் தடுத்து வைக்கப்பட்டிருப்பது தமிழ் மக்களின் வரலாற்றுப் பதிவுகளை அழிக்கும் முயற்சியாகும்.
எழுத்துச் சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் உயிர்நாடி: சர்வதேச ரீதியில் கருத்துச் சுதந்திரம் மற்றும் பேச்சுச் சுதந்திரம் குறித்துப் பேசுகின்ற இலங்கை அரசு, உள்நாட்டில் தமிழ் எழுத்தாளர்களின் பேனா முனைகளை முறிக்க முயல்வது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். வரலாற்றின் வலிகளைப் பதிவு
செய்வதும், சமூகத்தின் அவலங்களை எழுதுவதும் ஒரு எழுத்தாளனின் கடமையாகும். அத்தகைய படைப்புகளைப் ‘பயங்கரவாதம்’ என்ற முலாம் பூசித் தடுப்பது, ஒரு இனத்தின் ஆன்மாவைச் சிதைப்பதற்குச் சமமானது.எனத் தெரிவித்துள்ள கிளிநொச்சி ஊடக அமையம்
தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் நூல்களையும் நிபந்தனையின்றி
உடனடியாக விடுவிக்க வேண்டும்.
தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அச்சமின்றித் தமது கருத்துகளைப் பதிவு செய்வதற்கான சூழலை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடக மற்றும் எழுத்துச் சுதந்திரத்தை நசுக்கும் செயற்பாடுகளை அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.எனவும்
கோரிக்கை விடுத்துள்ளதோடு
எந்தவொரு அடக்குமுறைச் சட்டங்களாலும் உண்மையை மறைத்துவிட முடியாது. பேனா
முனைகளை முறிப்பதன் மூலம் வரலாற்றைத் துடைத்துவிட முடியாது என்பதை அரசுக்கு வலியுறுத்திக் கூறுகிறோம். தமிழ் எழுத்தாளர்களின்
உரிமைக்காகவும், கருத்துச் சுதந்திரத்திற்காகவும் கிளிநொச்சி ஊடக அமையம் என்றும் முன்னிற்கும் குரல் கொடுக்கும் என அவ்வறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
45925fe0-d767-44cd-9b26-f62575fc384f.jpg

சீயட்ல் சென்டர் துப்பாக்கிச் சூடு: சிறுவன் உட்பட இருவர் பலி, குறைந்தது ஐவர் காயம்

July 27, 2026

ஞாயிற்றுக்கிழமை இரவு சீயட்ல் சென்டரில் (Seattle Center) முக்கிய உணவுத் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்த போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்

BGWK6B54S5E3PJ37A4S5J7SH7Y

‘இங்கே ஒரு குழப்பமான சூழல் நிலவியது’: வாட்டர்லூ பல்கலைக்கழகப் பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸார் விசாரணை; நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

July 27, 2026

வாட்டர்லூவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 31 வயதுடைய நபர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இது நடப்பாண்டில் அப்பகுதியில் பதிவான

XRIJV6PPMZA57CCRZJQHBIDLBY

ஸ்கார்பரோவில் சாஸ் தெளித்து கவனம் சிதறடித்துத் திருடிய சந்தேக நபர்களின் புதிய புகைப்படங்களை பொலிஸார் வெளியீடு

July 27, 2026

ரொறன்ரோ பொலிஸார், கவனம் சிதறடிக்கும் திருட்டுச் சம்பவத்தின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்டவரின் மீது சந்தேக நபர் ஒருவர் ‘கெட்சப்’ (Ketch-up

XHFAYQV4L5FSHADV33MY3MBVHY

மின்சார ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து: 11 வயது சிறுவன் படுகாயம், சாட்சிகளைத் தேடும் ரொறன்ரோ பொலிஸார்

July 27, 2026

11 வயது சிறுவன் ஒருவன் தனது மின்சார ஸ்கூட்டரின் (e-scooter) கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியதில்

LNUXYUAULNCK7GSPUXGXBRCQKM

இது கவலையளிக்கிறது’: வெறுப்புணர்வு சார்ந்த தாக்குதல்கள் எனச் சந்தேகிக்கப்படும் சம்பவங்களில் ரொறன்ரோவிலுள்ள யூதர்களுக்குச் சொந்தமான 2 பேக்கரி கிளைகள் இலக்கு வைப்பு

July 27, 2026

பெருமளவிலான ரொறன்ரோ பகுதியைச் சேர்ந்த (GTA) பல யூத தொழுகைக்கூடங்கள் (synagogues) மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார்

death

குளியலறையில் உருக்குலைந்த நிலையில் சடலம்

July 27, 2026

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

kava

காவடி நடனத்தை நீக்க பரிந்துரை

July 27, 2026

தேவேந்திரமுனை ஸ்ரீ உத்பலவர்ண மகா தேவாலயத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவிருந்த பெரஹரவில் ஊர்வலத்தில் காவடி நடனத்தை நீக்குவதற்கு பொலிஸார்

wate

இளம் பிக்கு நீரில் மூழ்கி உயிரிழப்பு

July 27, 2026

மொனராகலை- வெல்லவாய, தெலுல்ல பகுதியில் உள்ள கிரிந்தி ஓயாவில் நீராடச் சென்ற இளம் பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்

aads

மன்னாரில் 43ஆவது தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு

July 27, 2026

நாடு முழுவதும் திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தின் மீது 1983ஆம் ஆண்டு, கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழ் இனப் படுகொலை நினைவேந்தல்

an

விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்தல் தொடர்பில் புதிய சட்டம்

July 27, 2026

விலங்குகளை நேசித்தல், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடைய இலங்கையின் சட்டக்

hurm

ஹோர்முஸில் நீரிணையில் பயணித்த எண்ணெய் கப்பல் வெடிப்பு?

July 27, 2026

ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று கண்ணிவெடி ஒன்றில் சிக்குண்ட நிலையில் வெடித்து சிதறியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள்

Death-2

பாடசாலை மாணவி திடீர் மரணம்: பெற்றோர் சந்தேகம்

July 27, 2026

பொகவந்தலாவை திரேசியா தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த