மலேசியாவில் நடைபெற்ற பொதுநலவாய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அணி 09 பதக்கங்களை வென்றுள்ளது.
அதற்கமைய, 03 தங்கப் பதக்கங்கள், 04 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 02 வெண்கலப் பதக்கங்களை வென்ற குறித்த அணி இன்று (17) 09.50 மணிக்கு மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் UL-319 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
இந்தப் போட்டி நவம்பர் 09 முதல் 16ஆம் திகதிவரை மலேசியாவின் கோலாலம்பூரில் 19 பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட போட்டியாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய 24 வீரர்கள் பங்கேற்றதுடன், அவர்களில் 07 பேர் பதக்கங்களை வென்றுள்ளனர்.
இலங்கை சதுரங்க சம்மேளனத்தின் உயர் அதிகாரிகள், வீரர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அவர்களை வரவேற்றுள்ளனர்.