கார்த்தி நடிப்பில் ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் தான் வா வாத்தியார். சூது கவ்வும் மற்றும் காதலும் கடந்து போகும் என இரு வெற்றிப்படங்களை கொடுத்த நலன் குமாரசாமி தான் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.இரு வருடங்களுக்கு முன்பே துவங்கப்பட்ட இப்படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்து ரிலீசுக்கு காத்துகொண்டு இருக்கின்றது. ஆனால் ஒரு சில நிதி நெருக்கடி காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிக்கொண்டே செல்கின்றது. கடந்த டிசம்பர் மாதம் கூட இப்படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்ய வேண்டும் என தாயரிப்பாளர் ஞானவேல் ராஜா கடுமையாக போராடினார். ஆனால் எதிர்பாராத விதமாக இப்படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை.
இதைத்தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படத்தை வெளியிடும் முயற்சியில் ஞானவேல் ராஜா இறங்கியதாக சொல்லப்பட்டது. பொங்கலுக்கு வெளியாகவிருந்த விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் தள்ளிபோனதை தொடர்ந்து கார்த்தியின் வா வாத்தியார் திரைப்படத்தை பொங்கலுக்கு வெளியிடலாம் என படக்குழு யோசித்திருக்கின்றனர். அதன்படி வா வாத்தியார் ஜனவரி 14 ஆம் தேதி ரிலீசாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.