ஒன்டாரியோவின் திறன் மேம்பாட்டு நிதி (Skills Development Fund – SDF) திட்டத்தின் கீழ் மானியம் பெற்ற ஒரு நிறுவனம் மீது விசாரணையைத் தொடங்கும்படி ஒன்டாரியோ மாகாணக் காவல்துறைக்கு (OPP) அந்த மாகாணத்தின் அரசு உத்தரவிட்டுள்ளது.
அந்த நிறுவனத்தில் நடத்தப்பட்ட விரிவான தடயவியல் கணக்காய்வில் (forensic audit) “முறைகேடுகள்” கண்டறியப்பட்டதையடுத்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட ஒரு வழக்கமான கணக்காய்வின் போது ஒரு “வெளிப்புற சேவை வழங்குநர்” குறித்து அவதானிக்கப்பட்டதாக, முதல்வரின் அலுவலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
அந்தச் சோதனையில் “முறைகேடுகள்” கண்டறியப்பட்டதால், அந்த நிறுவனம் மீது விரிவான தடயவியல் கணக்காய்வு நடத்தப்பட்டது.
அந்த நிறுவனத்துடன் தொடர்புடைய அனைத்து மானியப் பணிகளும் தற்போது மீளாய்வுச் செயற்பாட்டுக்கு உட்படுத்தப்படுகின்றன.