பேரவலத்துக்கு பின்னர் எழுந்துள்ள “பாதுகாப்பான வதிவிட காணித்தேவை ” மலையக பிரதிநிதிகளுடன் இணைந்து செயற்பட தயார் – மனோ கணேசன்

மலைநாட்டில், இந்த பேரவலத்துக்கு பின்னர் எழுந்துள்ள, “பாதுகாப்பான வதிவிட காணி” என்ற உரிமை கோரிக்கையை அரசுடன் உரையாடி பெற அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையக பிரதிநிதிகளுடன் கலந்து பேசி இணைந்து செயற்பட தயார். நமது மலையக சமூகத்தில் மிகவும் விளிம்பு நிலையில் வாழும் பிரிவினரின் பரிதாப சமூக பிரச்சினையை, மனதில் கொண்டு, இவர்களை அடையாளம் கண்டு, இவர்களுக்கு பாதுகாப்பான வதிவிட காணிகளை அரசிடம் கோரி பெறுவோம், என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஊடக செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

இதற்கு முன் நடைபெற்ற அவலங்களை விட இந்த முறை அவலம் அவதானத்துக்கு உரியது என நான் நம்புகிறேன். ஏறக்குறைய பெரும்பாலான மலை பகுதிகளிலும் மலை பாறைகள், மலை மேடுகள், தரை நிலங்கள் வெடித்து உள்ளன.

இடைவெளிகளில் நீர் வெளியேறுகின்றன. இது இயற்கை அனர்த்தம். சிலர் கூறுவதை போன்று இவற்றை கொங்ரீட் போட்டு ஓட்ட முடியாது. இவை இயற்கை நில வெடிப்பு.

மலைநாட்டில், மலை உச்சி, மண் சரிவு அபாயங்களை உடனடியாக எதிர் கொள்ளும் பிரிவினர் இருக்கிறார்கள். இவர்களின் பிரச்சினை, சமூகத்தில் மிகவும் விளிம்பு நிலையில் வாழும் பிரிவினரின் பரிதாப பிரச்சினை. இவர்களை அடையாளம் கண்டு, இவர்களுக்கு பாதுகாப்பான வதிவிட காணிகளை அரசிடம் அவசரமாக கோருவோம்.

இது தொடர்பில் ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்கவுடன் நான் கடந்த வாரம் நேரடியாக நாடாளுமன்றத்தில் உரையாடி உள்ளேன்.

பாதீட்டின் இறுதி நாளன்று, எதிர்கட்சிகளுடன் சேர்ந்து வெளிநடப்பு செய்யாமல், ஜனாதிபதியின் உரையை செவி மடுத்தேன். இனிமேல் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களிலேயே குடியமர்த்த-படுவார்கள் என அவர் சபையில் தன உரையில் கூறியதை நேரடியாக பாராட்டி, அதே அவகாசம் மலையக பெருந்தோட்ட மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.

அதன் பின், நமது எம்பீக்களும், நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இது தொடர்பாக கருத்து கூறி ஜனாதிபதியின் கவனத்துக்கு, காணி பிரச்சினையை மீண்டும் கொண்டு வந்துள்ளார்கள். ஆகவே, இன்று இது தேசிய பிரச்சினையாக மாறு உள்ளதை இனிமேல் எவரும் மறுக்க முடியாது.

பேரவலத்தை அடுத்து, நான் பல இடங்களுக்கு எனது கட்சி குழுவினருடன், நிவாரண பொருள் உதவிகளுடன், கண்காணிப்பு பயணங்கள் மேற்கொண்டேன்.

நான் போன பல இடங்களில், கண்டி நாவலபிட்டிய கங்க-இஹல-கோரள-அலுகொல்ல மலை உச்சி தோட்டம், மிகவும், ஆபத்து நிறைந்த பூமியாக என் மனதில் நிற்கிறது.

அங்கே அனாதரவாக இருந்த மக்களுக்கு, நாம் விநியோகித்த, உடனடி நிவாரணத்தை பெற்று கொண்ட அவர்கள் தம் வாழ்விட பரிதாப நிலையை எனக்கு கூறினார்கள்.

நான் அந்த மலை உச்சியில் மலையேறி நடக்கும் போதே, என் கால்களுக்கு கீழே, தரை பிளந்து, உள்ளே இருந்து நீர் பீறிட்டு வெளியே வருவதை என் கண்களால் கண்டேன்.

மீண்டும் ஒரு மழையோ, மண் சரிவோ வருமானால், கீழே உருண்டு வர தயாராக இருக்கும், பாறைகளையும், உயர்ந்த மண்மேடுகளையும், கண்டேன். இதை விட என்ன பரிதாபம் இருக்க முடியும்?

பாதுகாப்பான மாற்று காணிகள் இவர்களுக்கு வழங்க பட வேண்டும். அதுவும் அவசரமாக முன்னுரிமை அடிப்படையில் நடைபெற வேண்டும்.

ஆகவே, அரசியல் கட்சி, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, பேதங்களுக்கு அப்பால் இந்த விடயத்தில் நாம் ஒன்று பட்டு செயற்பட்டு, நமது சமூகத்தில் மிகவும் விளிம்பு நிலையில் வாழும் பிரிவினரின் பரிதாப சமூக பிரச்சினையை, மனதில் கொண்டு, இவர்களை அடையாளம் கண்டு, இவர்களுக்கு பாதுகாப்பான வதிவிட காணிகளை அரசிடம் கோரி பெறுவோம் என்றார்.

ele

இன்று நேபாளத்தில் பொதுத்தேர்தல்!

March 5, 2026

நேபாளத்தில் கடந்த ஆண்டு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டத்திற்குப் பிறகு, புதிய நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் இன்று (5) பலத்த

Poli

சட்டவிரோத எரிபொருள் சேகரிப்பு: சுற்றிவளைப்புகள் தீவிரம்

March 5, 2026

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் எரிபொருளைச் சேகரித்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த நபர்களை இலக்கு வைத்து

Sri lanka

ஐசிசியுடன் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் பேச்சு!

March 5, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்தை இடைக்காலக் குழுவொன்றின் கீழ் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி ஒருவரின் கீழ் கொண்டு வருவது குறித்து

har

ஹார்முஸ் நீரிணையில் சிக்கித்தவிக்கும் 20,000 மாலுமிகள்…

March 5, 2026

ஹார்முஸ் நீரிணையில் நடந்த நிகழ்வுகள் காரணமாக சுமார் 20,000 மாலுமிகள் சிக்கியுள்ளதாக ஐ.நா.வின் சர்வதேச கடல்சார் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

h

புயலை எதிர்கொள்வதற்கான பாராளுமன்ற விசேட குழு

March 5, 2026

‘டித்வா’ புயலை எதிர்கொள்வதற்கான முழுமையான தயார்படுத்தல்கள் இல்லாமை குறித்துப் பூரண ஆய்வொன்றை மேற்கொண்டு அறிக்கையிடவும், அதற்கான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை

arrest

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகப் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற இருவர் கைது

March 5, 2026

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகப் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற பிரதம எழுதுவினைஞர் ஒருவரை இலஞ்ச

rain

சில பகுதிகளில் பிற்பகல் மழை

March 5, 2026

ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அத்துடன் அம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் சில

ir

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கப்பலில் 84 சடலங்கள்!

March 5, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து சுமார் 80 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை

sou

தென்னிலங்கையில் இளம் பெண் கழுத்தறுத்து கொலை – பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்

March 5, 2026

தென்னிலங்கையில் இளம் பெண் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். காலி, கஹதுடுவ

kamo

ஈரானிய உச்சத் தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கு ஒத்திவைப்பு

March 5, 2026

ஈரானிய உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானில் பெரும் அரசியல் மாற்றங்கள்

iran

மேற்கு ஆசியாவில் போர் தொடரும் – ஈரான் திட்டவட்டம்

March 5, 2026

மேற்கு ஆசியாவில் மோதல் 5 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என்றும் போர் தொடரும் எனவும்

vijitha hera

பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடல்

March 5, 2026

மத்திய கிழக்கின் பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார். இதன்படி