பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முன்வராவிட்டால் சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் பாரிய போராட்டம் – சமன் ரத்னப்பிரிய

சுகாதாரத்துறை எதிர்கொண்டுவரும் பிரச்சினைக்கு ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முன்வராவிட்டால், சுகாதாரத்துறையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து பாரிய தொழிந்சங்க போராட்டத்துக்கு செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச தாதியர்களின் சங்கத்தின் தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை (29) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

அரச வைத்தியர் அதிகாரிகள் காரியாலயத்தில் இன்று வைத்திய தொழிற்சங்கங்களின் சந்திப்பொன்று இடம்பெற்றது. சுகாதார தொழிற்சங்கங்கள் பாரியளவில் செயலிழந்து வருவது தொடர்பாகவும் மக்களின் சுகாதார சேவைகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன. அதேபோன்று சுகாதார பணிக்குழாத்திலும் பாரிய பிரச்சினைகள் தலைதூக்கி வருகிறது. இந்த விடயங்கள் தொடர்பில் மேற்கொள்ளவுள்ள அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராயவே இந்த சந்திப்பு இடம்பெற்றது.

சுகாதாரத்துறையில் இடம்பெற்றுவரும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதை சுகாதார அமைச்சர் வழிவிட்டு செல்கிறார். அதேபோன்று ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரும் இதுதொடர்பில் கலந்துரையாடி தீர்வுகாணாமல் காலத்தை வீணடித்து வருகின்றனர். சுகாதாரத்துறை எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு அரசாங்கத்திடம் பதில் இல்லாமையே இதற்கு காரணமாகும்.

அதேநேரம் தற்போதைய சுகாதார அமைச்சரின் அனுமதியுடன் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள பல மருந்துப்பொருட்கள் பாவனைக்கு கூடாது. தரம் குறைந்தது என உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன.அதன் பிரகாரம் தற்போது பல மருந்துப்பொருட்களை தடை செய்திருக்கின்றன. இவ்வாறு தடை செய்யப்பட்டிருக்கும் மருந்துப் பொருட்களுக்கு மாற்று மருந்து பொருட்களை சுகாதார அமைச்சராே சுகாதாரத்துறையோ அறிவிப்பு செய்வதும் இல்லை.

அதேபோன்று வைத்தியசாலைகளில் பாரியளவில் வைத்திய உபகரணங்களுக்கு தட்டுப்பாடு இருந்துவருகிறது. சத்திரசிகிச்சைக்கு தேவையான உபகரணங்களுக்கு பற்றாக்குறை இருந்து வருவதால், சத்திர சிகிச்சைக்கு வருபவர்கள் இலட்சக்கணக்கில் பணம் எடுத்துவர வேண்டி இருக்கிறது. தேவையான உபகரணங்களை அவர்கள் வெளியில் இருந்தே பெற வேண்டி இருக்கிறார்கள். அத்துடன் சுகாதார சேவைக்கு ஆட்களை புதிதாக இணைத்துக்கொள்வதில்லை. அதனால் சுகாதார துறையின் அனைத்து துறைகளும் செயலிழந்து காணப்படுகின்றன. சேவையை மேற்கொள்ள போதுமான ஊழியர்கள் இல்லை.

அதேநேரம் இந்த காலப்பகுதிக்குள் 2500க்கும் மேற்பட்ட தாதிய அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். இதன் மூலம் ஊழியர்களின் பற்றாக்குறை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. தாதியர்கள் இல்லாமை காரணமாக சில வைத்தியசாலைகளை திறக்க முடியாமல் இருக்கின்றன. அதேபோன்று தாதியர்கள் இல்லாத வைத்தியசாலைகளும் இருக்கின்றன. சுகாதார ஊழியர்களுக்கான பதவி உயர்வுகளும் வழங்கப்படுவதில்லை. இதனால் ஊழியர்களும் சரியான சேவையை வழங்குவதற்கு பின்வாங்கி வருகிறார்கள்.

இவ்வாறு வைத்தியசாலைகளில் உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்களுக்கு இருந்துவரும் தட்டுப்பாடு காரணமாக சிகிச்சைக்கு வரும் நோயாளர்களுடன் ஊழியர்களே முரண்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான பிரச்சினைக்கு தீர்வுகாண சுகாதார அமைச்சர் தயார் இல்லை. அரசாங்கமும் தயார் இல்லை பேச்சுவார்த்தைக்கு வருவதில்லை. அதனால் இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் விரைவாக தீர்வு காண நடவடிக்கை எடுக்காவிட்டால், சுகாதார தாெழிற்சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து பாரிய தொழிற்சங்க போராட்டத்துக்கு செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறோம் அவ்வாறானதொரு நிலைக்கு செல்லாமல் அரசாங்கம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

o

யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் – ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு

March 3, 2026

சர்வதேச மகளிர் தினம் யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான

mano

இந்திய உயர்ஸ்தானிகரிடம் மனோ கணேசன் விரிவான கோரிக்கைகள் முன்வைப்பு!

March 3, 2026

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கு இலகுவான முறையில் கடல் கடந்த இந்தியக் குடியுரிமை (OCI) அந்தஸ்து வழங்குவது

g

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசருக்கு அழைப்பு

March 3, 2026

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோ அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

au

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் சுகாதார பொருட்கள் வழங்கல்!

March 3, 2026

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) முன்னாள் பிரதமரின்

xoo

கொழும்பு பங்குச்சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி

March 3, 2026

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய புள்ளி வீழ்ச்சியை இன்று (03) சந்தித்தது. இதன்படி அனைத்துப்

Poli

தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

March 3, 2026

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த

jud

விளக்கமறியல் கைதிக்கு பிணை வழங்க இலஞ்சம் வாங்கிய நபருக்கும் விளக்கமறியல்

March 3, 2026

சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவருக்குப் பிணை பெற்றுக்கொடுக்க உதவுவதற்காக, அவரது குடும்ப

pera

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பேராயர் சந்திப்பு

March 3, 2026

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

man

கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு

March 3, 2026

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும்

shabana

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

March 3, 2026

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா

nec

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை – ரஷ்யா

March 3, 2026

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு