பெருந்தோட்ட மக்கள் அனைவருக்கும் காணி உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்

மலையகப் பெருந்தோட்ட மக்கள் அனைவருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாகக் காணி உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

கொட்டக்கலையில் நேற்று (08.03.2026) நடைபெற்ற ‘மலையக வாழ்வுரிமை மாநாட்டில்’ கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், காணி, வீடு, மற்றும் நியாயமான ஊதியம் ஆகிய மூன்றே ஒரு சமூகத்தின் வாழ்வுரிமையைத் தீர்மானிக்கும் பிரதான காரணிகளாகும். இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் ஏனைய சமூகங்களை விடப் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ளனர். எனினும், நாம் எவருக்கும் தாழ்ந்தவர்கள் அல்ல. 1948இல் பறிக்கப்பட்ட எமது குடியுரிமை, நீண்ட போராட்டங்களுக்குப் பின்னரே மீளப் பெறப்பட்டது.

நல்லாட்சி அரசாங்கத்தின் நான்கு வருடக் காலப்பகுதியில் மாத்திரமே நாம் அதிகாரத்தில் இருந்தோம். அந்தக் குறுகிய காலத்தில் 7 பேர்ச் காணி உரிமை, தனி வீட்டுத் திட்டம், மலையக அதிகார சபை மற்றும் பாடசாலைகளுக்கான காணி ஒதுக்கீடு போன்ற பல அபிவிருத்திகளை முன்னெடுத்தோம். ஆனால், 40 வருடங்களாகப் பல்வேறு அரசாங்கங்களுடன் ஒட்டிக்கொண்டிருந்தவர்கள் எதனையும் செய்யவில்லை என்றார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்த அவர், மலையக மக்களுக்கு வெறும் ‘கண்காட்சிகளை’ காட்ட வேண்டாம் எனவும், முறையான ஆட்சியை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

அவர் மேலும் கூறுகையில், பெருந்தோட்டங்களில் வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும், அங்கு வாழும் அனைத்து மக்களுக்கும் காணி உரிமை வழங்கப்பட வேண்டும். பயிரிடப்படாத காணிகளை மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதாக ‘ஹட்டன் பிரகடனத்தில்’ ஜனாதிபதி அறிவித்திருந்தார். ஆனால் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

அனுராதபுரம் மற்றும் குருணாகல் பகுதிகளில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50 இலட்சம் ரூபாய் வழங்கி உதவிய அரசாங்கம், மலையகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த உதவியை வழங்கவில்லை. நாம் ஒன்றும் மாற்றான் தாய் பிள்ளைகள் அல்லர் என்றார்.

டிக்கோயா – கிழங்கன் ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் சகோதரி ஒருவரின் சடலத்திற்கு நேர்ந்த அசாம்பவிதம் தொடர்பில் தான் உரிய அமைச்சருடனும் பொலிஸ் அதிகாரிகளுடனும் பேசியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது குறித்து நாளைக்குள் முறையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க நேரிடும் என்றும் எச்சரித்தார். இறுதியாக, மலையகத்தில் விரைவில் ஒரு பலமான ‘தொழிற்சங்க சம்மேளனம்’ உருவாக்கப்படும் என்றும் அவர் இதன்போது பிரகடனம் செய்தார்.

puputhu

ஆகஸ்ட் மாதம் முதல் மின்வெட்டு ஏற்படும் அபாயம் – முன்னிலை சோசலிசக் கட்சி எச்சரிக்கை

March 9, 2026

நாட்டில் கடந்த பத்து நாட்களாக நிலக்கரி ஏற்றிய கப்பல்கள் எதுவும் வருகை தராத காரணத்தினால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல்

ni

புதிய தவிசாளராக றியாஸ் ஆதம் தெரிவு!

March 9, 2026

நிந்தவூர் பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியதுடன் புதிய தவிசாளராக சட்டத்தரணி றியாஸ் ஆதம் தெரிவானார். அம்பாறை

en

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி விபத்தில் உயிரிழப்பு

March 9, 2026

இன்று (09) மாலை வாத்துவ ரயில் நிலையத்திற்கும் பின்வத்தை ரயில் நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ள ரயில் பாலத்தின் மீது, இரண்டு

fire

கடும் வறட்சி; பற்றி எரியும் காடு

March 9, 2026

மத்திய மலைநாட்டில் நிலவும் கடும் வறட்சியான வானிலையைத் தொடர்ந்து, ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதியின் அளுத்கம பகுதியில் நேற்று

ha

“வளமான நாட்டின் அபிமானம் – அவளே நாட்டின் முன்னோடி” – பிரதமர்

March 9, 2026

பெண்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் சட்டப் புத்தகங்களுக்குள் மட்டும் முடங்கிவிடாமல், அவை ஒவ்வொரு பெண்ணும் நிஜ வாழ்க்கையில்

arrest

பல  காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது 

March 9, 2026

ஹட்டன் பகுதியில் பல வருடங்களாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர், ஹட்டன் பொலிஸ் பிரிவின் விசேட விசாரணைப்

wil

விமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

March 9, 2026

ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கை

keri

கேரி கிர்ஸ்டன் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமனம்

March 9, 2026

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக, தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும் புகழ்பெற்ற பயிற்சியாளருமான கேரி கிர்ஸ்டன்

thekk

வன்னியில் தேக்குமரக் குற்றிகளை கடத்திய சாரதி கைது

March 9, 2026

வன்னி பகுதியில் இருந்து தேக்குமரக் குற்றிகளை சட்டவிரோதமாக ஏற்றிவந்த லொறி ஒன்றை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் புத்தூர் சந்தி பகுதியில்

pu

ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் வாழ்த்து

March 9, 2026

ஈரானின் புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முஜ்தபா காமேனிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு

sa vas

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கைது

March 9, 2026

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 243.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை

ta

தண்ணீர் தொட்டி விழுந்ததில் ஐந்து மாணவர்கள் காயம்

March 9, 2026

பத்தேகமவில் உள்ள பாடசாலையொன்றில் இன்று (9) மதியம் தண்ணீர் தொட்டி விழுந்ததில் ஐந்து மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பத்தேகம