சென்னை:
தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பேட்டில், சமூக நீதி மற்றும் இடஒதுக்கீடு வரலாறு குறித்த பகுதியில் இடம்பெற்றிருந்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சியாளர் அம்பேத்கர் ஆகிய முக்கியத் தலைவர்களின் பெயர்கள் விடுபட்டதற்கு இயக்குநர் அமீர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமூக நீதி குறித்துத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அவர் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
-
தமிழ்நாட்டின் அடையாளங்கள்: “பெரியார், அண்ணா, அம்பேத்கர் என்பவை வெறும் பெயர்கள் அல்ல; அவை ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் அடையாளங்கள்.
-
எதிர்ப்பது தமிழர்களின் கடமை: இந்த வரலாற்று அடையாளங்களை அழிக்கவோ அல்லது மறைக்கவோ எந்த முகமூடியோடு வந்தாலும், அதனை வன்மையாக எதிர்க்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் முக்கியக் கடமையாகும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
Hashtags:
#DirectorAmeer #SocialJustice #Periyar #Anna #Ambedkar #TNPolitics #TamilNaduNews #ChennaiNews #PolicyNote #TamilNews #BreakingNewsTamil #TrendingNewsTamil