புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பழைய காயங்களை மீண்டும் கிளறி இனவாதத்தைத் தூண்டக்கூடாது – கருப்பையா ராமகிருஷ்ணன்

பிரித்தானியாவில் ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஒன்றியங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நிகழ்த்தவிருந்த உரைகள் புலம்பெயர் அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டமைக்கு நுவரெலியா மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதிநிதி கருப்பையா ராமகிருஷ்ணன் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் முக்கியமாகக் குறிப்பிட்டுள்ளவை:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டுக்கு அமைதியைப் பெற்றுக்கொடுத்தார் என்பதை நாம் பாராட்ட வேண்டும். இன்று இலங்கையில் சிங்களவர்களும் தமிழர்களும் ஒற்றுமையாக வாழ்கின்றனர். இந்த நிலையில், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பழைய காயங்களை மீண்டும் கிளறி இனவாதத்தைத் தூண்டக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

யுத்த காலத்தில் மலையகத் தமிழ் மக்கள் சொல்லொணாத் துயரங்களைச் சந்தித்தனர் என்பதை ராமகிருஷ்ணன் நினைவு கூர்ந்தார். “அன்று அடையாள அட்டை இல்லாமல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை இருந்தது. அச்சத்துடனேயே பெரும்பாலான நேரங்களில் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். ஆனால் இன்று அந்த நிலை முற்றாக மாறியுள்ளது,” என அவர் சுட்டிக்காட்டினார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான அபிவிருத்திப் பணிகள் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலேயே முன்னெடுக்கப்பட்டன. அனைத்துப் புலம்பெயர் தமிழர்களையும் நான் குறைகூறவில்லை, ஆனால் ஒரு சில குழுக்கள் தமது சுயநலத்திற்காகவும், தனிப்பட்ட நோக்கங்களுக்காகவும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

கருத்துச் சுதந்திரத்தைப் போற்றும் ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் போன்ற நிறுவனங்கள், இவ்வாறான போராட்டங்கள் ஒட்டுமொத்த மக்களின் கருத்தா அல்லது ஒரு சிறு குழுவின் கைவரிசையா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறான அழுத்தங்களுக்கு அடிபணிவது ஜனநாயகத்திற்கு அழகல்ல என்று அவர் மேலும் தெரிவித்தார்.

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,