புலம்பெயர் அமைப்புகளின் ஒப்பந்தங்களை நிறைவேற்றும் ஒரு கருவியாக அரசு மாறியுள்ளது!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமையானது முற்றிலும் ஓர் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயந்த சமரவீர இக்கருத்துக்களை வெளியிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

“இந்த அரசு ஆட்சிக்கு வந்தது முதல், நாட்டைப் பாதுகாத்த இராணுவ வீரர்களையும் புலனாய்வு அதிகாரிகளையும் இலக்கு வைத்துச் செயற்பட்டு வருகின்றது.

ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிவதற்குப் பதிலாக, சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற ஒரு புலனாய்வு அதிகாரியைச் சிறையில் அடைப்பதன் மூலம் அரசு தனது குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருகின்றது.

தற்போதைய அரசு தமிழ் புலம்பெயர் அமைப்புகளின் அழுத்தங்களுக்குப் பணிந்து, அவர்களின் ஒப்பந்தங்களை நிறைவேற்றும் ஒரு கருவியாக மாறியுள்ளது.

இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் முக்கிய பங்காற்றிய அனுபவம் வாய்ந்த அதிகாரிகளை இவ்வாறு வேட்டையாடுவது, நாட்டின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பு கட்டமைப்பையும் சீர்குலைக்கும் செயலாகும்.

சுரேஷ் சலே மீதான குற்றச்சாட்டுகள் எவ்வித ஆதாரமும் அற்றவை. 2019ஆம் ஆண்டு தாக்குதல் நடைபெற்ற காலகட்டத்தில் அவர் வெளிநாட்டில் தூதரகப் பணியில் இருந்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்ட உண்மையாகும்.

தமிழ் புலம்பெயர் அமைப்புகளின் அழுத்தத்தில் செயற்படும் அரசு! விமல் கட்சி கண்டனம் | Suresh Saleh Arrested Wimal Statement

அரசு தனது பொருளாதாரத் தோல்விகளையும், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியமையையும் மறைக்கவே இத்தகைய கைது நாடகங்களை அரங்கேற்றுகின்றது.

இக்கைது நடவடிக்கையானது தற்போதைய புலனாய்வுப் பிரிவினரிடையே ஒருவித அச்சத்தை உருவாக்கியுள்ளது. இது எதிர்காலத்தில் நாட்டின் தேசிய பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதியைப் பெற்றுத் தருவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதிலேயே குறியாக உள்ளனர். இத்தகைய அடக்குமுறைகளுக்கு எதிராக எமது கட்சி தொடர்ச்சியாகக் குரல் கொடுக்கும்.” – என்றார்.

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய