முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் (CIABOC) வாக்குமூலம் அளிக்க, வௌ்ளிக்கிழமை (07) காலை ஆஜரானார்.
விசாரணையை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, முன்னாள் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டது.