புயல் நிவாரணப் பகிர்வு தொடர்பாக நிலவும் முரண்பாடு; ஊடகவியலாளர் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

​மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் புயல் நிவாரணப் பகிர்வு தொடர்பாக நிலவும் முரண்பாடுகளை வெளிப்படுத்திய ஊடகவியலாளர் ஒருவருக்கு எதிராக மூதூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக குறித்த ஊடகவியலாளர் இன்று (11.2.2026) பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.​

தனியார் வானொலி மற்றும் ஊடக நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் குறித்த ஊடகவியலாளர் மீது, மூதூர் பிரதேச செயலாளரினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுகின்ற அரசாங்கத்தின் உதவித் திட்டங்கள் தொடர்பாக, சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

​சுமார் இரண்டு மணிநேர வாக்குமூலத்தின் பின்னர் பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறிய ஊடகவியலாளர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அதிகாரிகளின் போக்கை வன்மையாகக் கண்டித்தார்.​

அவர் மேலும் தெரிவிக்கையில்:​”மக்களின் பிரச்சினைகளை வெளியில் கொண்டு வரும் கடமையை ஊடகவியலாளர்கள் செய்கின்றனர். ஆனால், அதிகாரிகள் அந்தப் பொறுப்பைச் சரியாகச் செய்வதில்லை.

மூதூர் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களில் சுமார் 330 பேருக்கு மாத்திரமே தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

ஏனைய பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என ஊடகவியலாளர்களிடம் முறையிடுகின்றனர்.​

மக்களின் உரிமைகள் மறுக்கப்படும் போது, அதனைப் பாதுகாப்பதும் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்வதும் ஊடகவியலாளர்கள் தானே. இந்த உண்மையை அந்த அதிகாரி மறந்துவிட்டாரா, பாதிக்கப்பட்ட மக்களின் தரப்பு நியாயத்தை வெளியில் கொண்டு வந்ததற்காக இன்று நான் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளேன்,” எனத் தெரிவித்தார்.

உலகம் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசத்தின் இன அமைப்பை நிரந்தரமாக மாற்றும் வேகமான முயற்சிகளை காண்கிறது எனவும், இது மக்களை அவர்களுடைய நிலங்களிலிருந்து விலக்கி வெளியேறச் செய்யும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

cham

பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகத்தின் பணி இடைநிறுத்த விவகாரம்: ரிட் மனு மார்ச் 18 இல் விசாரணைக்கு!

March 3, 2026

எவ்வித நியாயமான விசாரணையுமின்றி தனது பணி இடைநிறுத்தப்பட்ட தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யும் ரிட் உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்றத்தின்

amazo

அமேசான் நிறுவனத்தின் பல தரவு மையங்கள் மீது ட்ரோன் தாக்குதல்

March 3, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழலுக்கு மத்தியில், உலகின் முன்னணி கிளவுட் சேவை வழங்குநரான அமேசான் நிறுவனத்தின் பல

masoo

அரசாங்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் வழமை போன்று இடம்பெறுகின்றன – ஈரான் ஜனாதிபதி

March 3, 2026

தனது நாட்டுக்கு எதிரான போர் தீவிரமடைந்து வருகின்ற போதிலும், அரசாங்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் வழமை போன்று இடம்பெற்று வருவதாக ஈரான்

Ruvan Ranasinga

சுற்றுலாப் பயணிகளின் வருகை சரிவு?

March 3, 2026

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் வருகை இலக்குகளை அடைய முடியவில்லை

an

அமைதியான உலகிற்குத் தேவையான அர்ப்பணிப்பையும் வழிகாட்டலையும் மிக விரைவில் வழங்க வேண்டும் – ஜனாதிபதி

March 3, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கட்டுப்படுத்துவதற்கு, அதில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காகத் தேவையான அர்ப்பணிப்பையும்

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த