புன்னைச்சோலையில் நிவாரணம் வழங்கவும் கிராம உத்தியோகத்தரை இடமாற்றவும் கோரிப் போராட்டம்!

மட்டக்களப்பு, புன்னைச்சோலை கிராம சேவகர் பிரிவில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரியும், கிராம உத்தியோகத்தரை இடமாற்றம் செய்யக்கோரியும் பொதுமக்கள் நேற்று (15) மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டனர். இதனையடுத்து அங்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, குறித்த கோரிக்கைகள் மற்றும் பாதிப்பின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக வழங்கிய உறுதிமொழியை அடுத்து முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் புன்னைச்சோலை கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நிவாரணமோ அல்லது நிதியுதவியோ வழங்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டி, பாதிக்கப்பட்ட மக்கள் புன்னைச்சோலை பகுதியில் ஒன்று திரண்டனர்.

நூற்றுக்கணக்கான பெண்கள் ஒன்றுகூடி, கிராம உத்தியோகத்தரை இடமாற்றுமாறும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் கோரி ஆர்ப்பாட்டப் பேரணியை ஆரம்பித்தனர். இப்பேரணியானது மாமாங்கம் ஆலய வீதி, பார் வீதி, அரசடி சுற்றுவட்டம் மற்றும் நகர் மணிக்கூட்டுக் கோபுரம் வழியாகச் சென்று இறுதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தை அடைந்து முற்றுகையிட்டது.

இவ்விடத்திற்கு விஜயம் செய்த தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார். கிராம உத்தியோகத்தர் தொடர்பான புகார்கள் குறித்தும், நிவாரணம் தொடர்பாகவும் தீர்க்கமான விசாரணை செய்து மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அவர் வாக்குறுதி அளித்ததையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இது தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் க. பிரபு,

“தாம் பாதிக்கப்பட்டபோது கிராம உத்தியோகத்தர் தங்களைப் பார்வையிடவில்லை எனவும், அதனால் வெள்ள நிவாரணம் மற்றும் அரசாங்கக் கொடுப்பனவுகள் தமக்குச் சரியாகக் கிடைக்கவில்லை எனவும் மக்கள் முறையிட்டனர். எனவே, அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்போம். நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும், பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் குறித்தும் பரிசீலனை செய்து உரியவர்களுக்கு நிவாரணம் கிடைக்க வெகு விரைவில் ஏற்பாடு செய்வோம்” என தெரிவித்தார்.

மேலும், கிராம உத்தியோகத்தர் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு, அவரது செயல்பாடு தவறாக இருக்கும் பட்சத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் அரசியல் நோக்கம் உள்ளதை நாங்கள் அவதானித்துள்ளோம். கடந்த காலத்தில் மக்களின் நிதியை வீணடித்தவர்கள் மற்றும் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளுடன் தொடர்புடையவர்கள் மக்களைத் தூண்டிவிட்டு இதுபோன்ற விஷமத்தனமான செயல்களில் ஈடுபடுவதாகத் தெரிகிறது.

உண்மையில் ஆர்ப்பாட்டத்தின் ஊடாகத்தான் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தேவையில்லை. நேரடியாக நீங்கள் பிரதேச செயலாளரிடம் கோரிக்கைகளை முன்வைத்தால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அதுவும் முடியவில்லை என்றால் அரசாங்க அதிபர் ஊடாக நடவடிக்கை மேற்கொள்ள முடியும். அதுவும் இயலாவிடின் என்னை நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள். அரசாங்கம் என்ற ரீதியில் நான் உரிய நடவடிக்கை எடுப்பேன்” எனத் தெரிவித்தார்.

w

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

March 5, 2026

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில்

cid

மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சாலே?

March 5, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019

cu

இருளில் மூழ்கியது கியூபா

March 5, 2026

கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை

sh

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது!

March 5, 2026

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

zo

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

March 5, 2026

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன்

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12

olugala

மோசடி ஒழிப்புப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

March 5, 2026

வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ASP ஓலுகல இன்று கடமையேற்பு! பாணந்துறை, வலான மத்திய ஊழல் ஒழிப்புச்

un

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. கடும் கண்டனம்

March 5, 2026

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

னேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த