ரொறன்ரோவின் மேற்குப் பகுதியில், புதிய மவுண்ட் டென்னிஸ் (Mount Dennis) புகையிரத நிலையம் கடந்த ஞாயிற்றுக்கிழமை GO ட்ரான்சிட் மற்றும் யுனியன் பியர்சன் (UP) எக்ஸ்பிரஸ் சேவைகளுக்காக அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
போக்குவரத்து இணைப்புகளை மேம்படுத்தும் நோக்குடனேயே இந்த புதிய புகையிரத நிலையம் செயற்படவுள்ளது.
வெஸ்டன் வீதிக்கும் (Weston Road) பிளாக் க்ரீக் டிரைவுக்கும் (Black Creek Drive) இடையில், எக்ளிங்டன் அவென்யூ மேற்கில் அமைந்துள்ள இந்த நிலையம், ஒரு முக்கிய போக்குவரத்து மையமாக இயங்கவுள்ளது.
கிச்சனர் GO புகையிரதத்தின் விரைவு அல்லாத சேவைகள், வார நாட்களில் 30 நிமிடங்களுக்கு ஒருமுறையும், வார இறுதி நாட்களில் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறையும் மவுண்ட் டென்னிஸ் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.