புதிய அரசியலமைப்பு; நடைமுறைக்குச் சாத்தியமில்லை – கலாநிதி சரத் அமுனுகம

13ஆவது திருத்தச்சட்டம் அரசியலமைப்பில் காணப்படுகின்ற நிலையில் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவது பற்றியே தற்போது அவதானம் செலுத்த வேண்டும். அதனை தவிர்த்து புதிய அரசியலமைப்பை உருவாக்குவது பற்றிய உரையாடலை ஆரம்பிக்கின்றபோது நடைமுறையில் சாத்தியமாகாத நிலைமையே மீண்டும் உருவாகும் என்று முன்னாள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.

இலங்கை மன்றக்கல்லூரியில் வன்டெக்ஸ்ட் இன்னிஸியேட்வின் ஏற்பாட்டில் நடைபெற்ற பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் ‘இலங்கையில் சமாதானப்பேச்சுவார்த்தை முன்னெடுப்பு: ஒரு உள்ளக பார்வை’ எனும் நூல் பற்றி நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

சுதந்திர இலங்கையில், சமஷ்டி தீர்வு பற்றி உரையாடலை பண்டாரநாயக்க ஆரம்பித்திருந்தார். ஆனால் அதன்பின்னர் அந்த உரையாடல் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் கூர்ப்படைந்திருந்த நிலையில் தனி நாட்டை உருவாக்குவது பற்றியதாகவே இருந்தது. அத்துடன் வன்முறைகள் நிறைந்ததாகவும் இருந்தது. இந்த வரலாற்றை நாம் அனைவரும் அறிவோம்.

ஆயுதங்களை ஏந்திய தமிழீழ விடுதலைப்புலிகள் தனிநாடு தான் இறுதியான தீர்வு என்பதில் உறுதியாக இருந்தார்கள். அத்தகைய நிலைப்பாடுகளை உடைய தரப்பினருடன் பேச்சுவார்த்தைக்கு செல்வது என்பது மிகவும் முக்கியமான விடயமாகும். அந்தவகையில் பேராசிரியர் பீரிஸ் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டமையானது மிகவும் முக்கியமானது.

ஆனால் இறுக்கமான நிலைப்பாடுடைய ஒரு தரப்பினருடன் பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்திருந்து அதன் ஊடாக தீர்வினை பெற முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருப்பது மிகவும் வேடிக்கையானது.

ஏனென்றால் தமிழீழ விடுதலைப்புலிகளின் சார்பில் அன்டன் பாலசிங்கம் மட்டுமே பேச்சுவார்த்தை மேசைக்கு பொருத்தமானவராக இருந்தார். அவரால் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் நிலைப்பாடுகளை மாற்றக்கூடிய முழுமையான இயலுமை காணப்பட்டிருக்கவில்லை.

அவ்வாறானதொரு தரப்புடன் பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்திருந்து பேசுவது என்பது மிகவும் கடினமானதொரு விடயம். அந்தப்பணியை பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் செய்திருந்திருக்கின்றமை பாராட்டக்கூடிய விடயமாகும்.

ஆனால் அவர் பேச்சுவார்த்தை மேசையில் எந்த நம்பிக்கையுடன் இருந்தார் என்பது பற்றிய கேள்விகள் என்னிடத்தில் இன்னமும் இருக்கின்றன. இவ்வாறான நிலையில் இறுக்கமான நிலைப்பாட்டில் இருந்த விடுதலைப்புலிகளுக்கு ஈற்றில் அவர்களின் நிலைப்பாட்டின் பிரகாரமே பதிலளிக்கப்பட்டது.

அதனை தவிர்க்க முடியாது. ஏனென்றால் எந்தவொரு விட்டுக்கொடுப்புக்கும் தயாராக இல்லாத தரப்பு ஈற்றில் தனது நிலைப்பாட்டாலேயே முடிவுக்கு வருவது இயற்கையானது. அது தான் புலிகளுக்கு நடந்தது.

தற்போதைய நிலையில் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் முழுமையாக தீர்க்கப்படவில்லை. அதுபற்றிய உரையாடல்கள் காணப்பட்டாலும் செயற்பாடுகள் இல்லை. இதற்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்கப்போவதாக கூறுகின்றார்கள்.

என்னைப் பொறுத்தவரையில் 13ஆவது திருத்தச்சட்டம் அரசியலமைப்பில் உள்ளது. அதனை முழுமையாக அமுலாக்குவதன் ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வினைக் கண்டு கொள்ள முடியும். அதனைவிடுத்து ஒற்றையாட்சியை நீக்குகின்றோம், முறைமையை மாற்றுகின்றோம் என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கின்ற எந்தவொரு செயற்பாடுகளும் நடைமுறையில் வெற்றி பெறுவது மிகவும் கடினமான விடயமாகும்.

ஆகவே தான் 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக அமுலாக்குவதோடு மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதன் ஊடாக கணிசமான பிரச்சினைகளுக்கு முடிவுக்கு கொண்டுவர முடியும் என்பது எனது நிலைப்பாடாகும் என்றார்.னடி கவனம் செலுத்த வேண்டும். தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வருவதற்கு இவ்வாறான சில குழுக்கள் உதவியிருக்கலாம். அதன் காரணமாகவே இவ்வாறான நியமனங்கள் வழங்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. இந்த நிலைமை தொடர்வது நாட்டுக்கு ஆபத்தானது என எச்சரிக்கின்றோம் என்றார்.

eng

இங்கிலாந்து பிறீமியர் லீக்:வொல்வ்ஸிடம் தோற்ற நடப்புச் சம்பியன்கள்

March 4, 2026

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான

rana

இலங்கை கிரிக்கெட் சபை பாரியதொரு தவறைச் செய்தது!

March 4, 2026

இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகிகளுக்கான தேர்தலில் நிஷாந்த ரணதுங்கவை வெல்ல விடாமல், இடைக்கால நிர்வாகத்தை 2015-இல் நியமித்து பாரியதொரு தவறைச்

gal

முச்சக்கர வண்டியிலிருந்து சடலம் மீட்பு

March 4, 2026

வெட்டுக்காயங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் சடலம், மொரட்டுவை காலி வீதிப் பகுதியில்

par

பாராளுமன்றில் இறுதி விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

March 4, 2026

பாராளுமன்ற பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த இறுதி விசாரணை அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான