இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகளை பிரிட்டிஷ் ஏர்வேஸ் மதிப்பிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
எனினும் பிராந்திய தேவையைப் பயன்படுத்தி மாலைத்தீவு வழியாக விமான சேவையை முன்னெடுப்பதற்கான ஆரம்ப ஏற்பாடுகள் செய்யப்படுவதாக தெரிய வந்துள்ளது.
பிரிட்டிஷ் எயார்வேஸ் கடைசியாக 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் போயிங் B777 விமானத்தைப் பயன்படுத்தி இலங்கைக்கான விமான சேவைகளை முன்னெடுத்தது.
ஹேலிஸ் ஏவியேஷன் 2013ஆம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் எயார்வேஸின் பொது விற்பனை முகவராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.