பிரிட்டனில் 20 வயது இந்திய வம்சாவளி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, 32 வயது நபரை போலீசார் கைது செய்தனர்.
பிரிட்டனின் வால்சலில் நேற்று மாலை 20 வயது இந்திய வம்சாவளி பெண்ணுக்கு, அங்கு வந்த ஒரு நபர் இன ரீதியாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் போலீசிடம் புகார் அளித்த நிலையில் சந்தேகத்தின் பேரில் 32 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார்.
வால்சால் காவல்துறையின் தலைமை கண்காணிப்பாளர் பில் டால்பி கூறுகையில், குட்டையான கூந்தல் மற்றும் கருமையான ஆடை அணிந்திருந்த சந்தேக நபர், சிசிடிவி காட்சிகள் வெளியான பிறகு தொடங்கிய தேடுதலுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார் .