பிராம்ப்டன் நகராட்சியின் 2026 பட்ஜெட் ஆலோசனைச் சந்திப்பு

கடந்த இரவு நடைபெற்ற பிராம்ப்டன் நகராட்சி – உங்கள் உள்ளாட்சி அரசு ஏற்பாடு செய்த BramBudget2026 தொலைபேசி டவுன் ஹால் கலந்துரையாடலில் பங்கேற்ற அனைவருக்கும் எங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என பிராம்ப்டன் நகராட்சி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளது.

5,800-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதில் பங்கேற்று, நகராட்சியின் பட்ஜெட் ஆலோசனைச் செயல்முறைகளுக்கு வழிகாட்டும் வகையில் கேள்விகள், கருத்துகள் மற்றும் முன்னுரிமைகளைப் பகிர்ந்துகொண்டனர்.

மாலை முழுவதும், குடிமக்கள் நேரடி கருத்துக்கணிப்புகள் (live polling) மூலம் தங்களது பார்வைகளை வெளிப்படுத்தினர். இதன் மூலம் செலவுக்குத் தாங்குதல் (affordability), சேவை மட்டங்கள் மற்றும் முக்கிய முதலீட்டு துறைகள் குறித்து மதிப்புமிக்க கருத்துகள் பெறப்பட்டன.

கருத்துக்கணிப்பு முடிவுகள் பின்வருமாறு,

90% பங்கேற்பாளர்கள், பாதுகாப்பை மேம்படுத்தவும், சொத்து உரிமையாளர்களின் பொறுப்புணர்வை உறுதிப்படுத்தவும், துணைச் சட்ட (by-law) சேவைகள் மற்றும் தீயணைப்பு அதிகாரிகளின் விரிவாக்கத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

பெரும்பாலானோர் (39%) சிறிய வரி உயர்வு ஏற்பட்டாலும், தற்போதைய சேவை மட்டங்களைத் தொடர்ந்து பேண வேண்டும் என ஆதரித்தனர்.

77% பேர், பிராம்ப்டனின் இரண்டாவது மருத்துவமனை கட்டுவதற்கான நகரத்தின் உள்ளூர் பங்காக தேவைப்படும் தொடர்ச்சியான 1% நகராட்சி வரி (City levy)-க்கு ஆதரவு தெரிவித்தனர்.

65% பேர், செயலில் ஈடுபடும் போக்குவரத்து (active transportation) தொடர்பான நகரத்தின் தொடர்ச்சியான விரிவாக்க முயற்சிகளுக்கு ஆதரவு அளித்தனர்.

41% பேர், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு சராசரியாக $92 அளவிலான சொத்து வரி உயர்வை (driveway windrow clearing சேவைக்காக) ஏற்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.

2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து நகரத் தலைமைத்துவத்துடன் நேரடியாக கலந்துரையாடும் வாய்ப்பை வழங்கும் வகையில், இவ்வாரத்தில் அனைத்து வார்டு இணைப்புகளிலும் நடைபெறவுள்ள Ward Coffee Chats மூலம் குடிமக்கள் இந்த உரையாடலைத் தொடர்ந்து முன்னெடுக்கலாம் என பிராம்ப்டன் நகராட்சி நகராட்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

har

ஹார்முஸ் நீரிணையில் சிக்கித்தவிக்கும் 20,000 மாலுமிகள்…

March 5, 2026

ஹார்முஸ் நீரிணையில் நடந்த நிகழ்வுகள் காரணமாக சுமார் 20,000 மாலுமிகள் சிக்கியுள்ளதாக ஐ.நா.வின் சர்வதேச கடல்சார் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

h

புயலை எதிர்கொள்வதற்கான பாராளுமன்ற விசேட குழு

March 5, 2026

‘டித்வா’ புயலை எதிர்கொள்வதற்கான முழுமையான தயார்படுத்தல்கள் இல்லாமை குறித்துப் பூரண ஆய்வொன்றை மேற்கொண்டு அறிக்கையிடவும், அதற்கான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை

arrest

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகப் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற இருவர் கைது

March 5, 2026

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகப் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற பிரதம எழுதுவினைஞர் ஒருவரை இலஞ்ச

rain

சில பகுதிகளில் பிற்பகல் மழை

March 5, 2026

ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அத்துடன் அம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் சில

ir

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கப்பலில் 84 சடலங்கள்!

March 5, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து சுமார் 80 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை

sou

தென்னிலங்கையில் இளம் பெண் கழுத்தறுத்து கொலை – பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்

March 5, 2026

தென்னிலங்கையில் இளம் பெண் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். காலி, கஹதுடுவ

kamo

ஈரானிய உச்சத் தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கு ஒத்திவைப்பு

March 5, 2026

ஈரானிய உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானில் பெரும் அரசியல் மாற்றங்கள்

iran

மேற்கு ஆசியாவில் போர் தொடரும் – ஈரான் திட்டவட்டம்

March 5, 2026

மேற்கு ஆசியாவில் மோதல் 5 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என்றும் போர் தொடரும் எனவும்

vijitha hera

பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடல்

March 5, 2026

மத்திய கிழக்கின் பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார். இதன்படி

ind

இந்திய மீனவர்கள் உதவி செய்தும் கரை திரும்பாத காங்கேசன்துறை மீனவர்கள்

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை – ஊரணிப் பகுதியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களை, இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக

gun

வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

March 5, 2026

மத்துகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை

chi

அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா!

March 5, 2026

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர்