அட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று (26) தலவாக்கலை பிரதேச செயலக காரியாலயத்துக்கு முன்பாக தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டு உயிர்மாய்த்துக்கொள்ள முயற்சித்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று பகல் 2.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து உயிர்மாய்த்துக்கொள்ள முயன்ற நபரை பிரதேச மக்கள் விரைந்து செயற்பட்டு, காப்பாற்றி, அவரை நோயாளர் காவு வண்டியின் ஊடாக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் தலவாக்கலை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.