பிரதி அமைச்சர் பற்றி சர்ச்சையைக் கிளப்பிய எதிரணி

அநுர அரசின் பிரதி அமைச்சர் ஒருவர் கொழும்பில் 50 கோடி ரூபா மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கின்றார் என்றும், அதை அவருக்கு யார் நன்கொடையாக அளித்தார்கள் என்றும் எதிர்கட்சியினர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வரவு – செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் போது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி ஆளும் கட்சியினர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து உரையாற்றுகையிலேயே மேற்படி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில், “நீதிமன்ற வழக்குகளுக்காக இந்தப் பிரதி அமைச்சரை ஜே.வி.பி. தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இந்தப் பிரதி அமைச்சர் இந்த அடுக்குமாடி குடியிருப்பை எப்படி வாங்கினார்? அவருக்கு அடுக்குமாடி குடியிருப்பை யார் கொடுத்தார்கள்? அர்ஜுன் அலோசியஸ் அவருக்கு அடுக்குமாடி குடியிருப்பைக் கொடுத்தாரா? அல்லது அர்ஜுன் அலோசியஸ் போன்ற பணக்கார நண்பரிடமிருந்து வந்ததா? இந்த அரசில் மற்றொரு உயர் அதிகாரி ஒருவர் அடிக்கடி கமிஷன் தேடுகின்றார்.

சட்டவிரோதமாகக் கொள்கலன்களை அகற்றுவதில் ஈடுபட்டுள்ள மற்றொரு அமைச்சர் இருக்கின்றார். கப்பல் போக்குவரத்து என்ற தலைப்பு அவரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அது அவரை நிரபராதியாக்காது. ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனிப் பத்திர ஊழல், சர்க்கரை ஊழல் மற்றும் தேங்காய் எண்ணெய் ஊழல் பற்றிப் பேச முடியாது.

இதேவேளை, இந்த அரசில் உள்ள சில அமைச்சர்கள் சில பாதாள உலகக் குழு நபர்களைச் சார்ந்து இருக்கின்றனர். ஆனால், அவர்கள் சுதந்திரமாக நடமாட மற்றவர்கள் கைது செய்யப்படுகின்றனர்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

sal

சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்?

March 5, 2026

இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ci

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளுடன் இந்தியர் உட்பட இருவர் கைது

March 5, 2026

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்திய நாட்டவர் ஒருவரும், நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த

Death-2

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

March 5, 2026

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை (IT) நிபுணர் ஒருவர், கால் வழுக்கி ரயிலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக

aj

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு

March 5, 2026

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, “மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்” என்ற கருப்பொருளின் கீழ்

up

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

March 5, 2026

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை

sh22

காணாமல் போன காங்கேசன்துறை ஊரணி மீனவர்கள் இந்தியாவில் மீட்பு

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில்

ron

தனி விமானத்தில் வெளியேறிய ரொனால்டோ

March 5, 2026

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளது. சவுதி

pucs

நிலக்கரியில் 848 கோடி ரூபாவை கரியாக்கிய அரசாங்கம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

March 5, 2026

நிலக்கரி இறக்குமதியில் நாட்டுக்கு சுமார் 848 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டமைப்பு மற்றும்

cPas

கனேடிய கடவுச்சீட்டுப் பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது?

March 5, 2026

கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மார்க்

1

சர்வதேச பாடசாலை ஒன்றில் போத்தலில் குளிசைகள்; மாணவிகள் பாதிப்பு

March 5, 2026

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட

sh

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்?

March 5, 2026

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று

dau

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம்

March 5, 2026

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட்