பிரதமரும் வெளிவிவகார அமைச்சரும் உயர் நீதிமன்றம் செல்வார்களா?

நீதியமைச்சினால் பயங்கரவாதத்தில் இருந்து இராச்சியத்தை பாதுகாக்கும் சட்டத்தை உருவாக்கும் வகையிலான சட்டவரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் உள்ளடக்கம் முழுமையாக இந்த சட்டவரைவிலும் காணப்படுகிறது. பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தற்போது உயர்நீதிமன்றம் செல்வார்களா என மக்கள் போராட்ட அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சட்டத்தரணி நுவன் போபகே கேள்வியெழுப்பினார்.

கொழும்பில் உள்ள மக்கள் போராட்ட அமைப்பின் காரியாலயத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துக் செய்வதாக குறிப்பிட்டுக் கொண்டே ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வருவார்கள். அதிகாரத்துக்கு வந்ததன் பின்னர் அதனை மறந்து விடுவார்கள்.

2023 ஆம் ஆண்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை காட்டிலும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள் பாரதூரமானதாக காணப்பட்டது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிராக தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்து பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் முழுமையாக வாபஸ்பெற வேண்டும் என்று கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

நீதியமைச்சினால் தற்போது வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து இராச்சியத்தை பாதுகாக்கும் சட்டத்தை உருவாக்கும் வகையிலான சட்டவரைவில் 2023 ஆம் ஆண்டு கொண்டு வந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் உள்ளடக்கம் முழுமையாக இந்த சட்டவரைவிலும் காணப்படுகிறது.

தேசிய மக்கள் சக்தியினர் எதிர்க்கட்சியில் இருக்கும் போது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டு ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அதனையே கொண்டு வருவது முறையற்றது. ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பேயின் பற்கள் நல்லதாக இருக்காது என்பதை அரசாங்கத்திடம் குறிப்பிட்டுக் கொள்கிறோம்.இந்த சட்டவரைவுக்கு எதிராக பிரதமர் மற்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சர் உயர்நீதிமன்றம் செல்வார்களா, எதிர்ப்பை வெளிப்படுத்துவார்களா என கேள்வியெழுப்பினார்.

WhatsApp Image 2026-03-05 at 12.42.39

கனடாவின் பிராம்டன் நகரமும் உள்ளூர் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றது!

March 5, 2026

பிராம்டன் நகரம் யுனைடெட் வே கிரேட்டர் டொரான்டோ (United Way Greater Toronto) அமைப்பின் உள்ளூர் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பதில்

arrest

பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

March 5, 2026

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்டலங்க பகுதியில், பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று

dea

களனி கங்கையில் நீராடிய சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மாயம்!

March 5, 2026

கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேபார்க் உணவகத்திற்கு அருகிலுள்ள களனி கங்கையில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்

go

தங்க விலை மீண்டும் உச்சத்தில்!

March 5, 2026

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின்

per

இலங்கையில் தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம் – பெற்றோலிய கூட்டுத்தாபனம்

March 5, 2026

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ele

இன்று நேபாளத்தில் பொதுத்தேர்தல்!

March 5, 2026

நேபாளத்தில் கடந்த ஆண்டு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டத்திற்குப் பிறகு, புதிய நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் இன்று (5) பலத்த

Poli

சட்டவிரோத எரிபொருள் சேகரிப்பு: சுற்றிவளைப்புகள் தீவிரம்

March 5, 2026

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் எரிபொருளைச் சேகரித்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த நபர்களை இலக்கு வைத்து

Sri lanka

ஐசிசியுடன் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் பேச்சு!

March 5, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்தை இடைக்காலக் குழுவொன்றின் கீழ் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி ஒருவரின் கீழ் கொண்டு வருவது குறித்து

har

ஹார்முஸ் நீரிணையில் சிக்கித்தவிக்கும் 20,000 மாலுமிகள்…

March 5, 2026

ஹார்முஸ் நீரிணையில் நடந்த நிகழ்வுகள் காரணமாக சுமார் 20,000 மாலுமிகள் சிக்கியுள்ளதாக ஐ.நா.வின் சர்வதேச கடல்சார் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

h

புயலை எதிர்கொள்வதற்கான பாராளுமன்ற விசேட குழு

March 5, 2026

‘டித்வா’ புயலை எதிர்கொள்வதற்கான முழுமையான தயார்படுத்தல்கள் இல்லாமை குறித்துப் பூரண ஆய்வொன்றை மேற்கொண்டு அறிக்கையிடவும், அதற்கான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை

arrest

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகப் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற இருவர் கைது

March 5, 2026

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகப் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற பிரதம எழுதுவினைஞர் ஒருவரை இலஞ்ச

rain

சில பகுதிகளில் பிற்பகல் மழை

March 5, 2026

ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அத்துடன் அம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் சில