பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உலகம் மீண்டும் உறுதிபூண வேண்டும் – ஐ. நாடுகள் சபையின் பொதுச்செயலாளர்

இப்போது, முன்பை விட அதிகமாக, எந்த ஒரு நாடும் தனியாகத் தீர்க்க முடியாத பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உலகம் மீண்டும் உறுதிபூண வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் தினத்தை முன்னிட்டு, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்டு 80 ஆண்டுகள் நிறைவு பெறுவது மற்றும் இலங்கையுடனான அதன் கூட்டாண்மைக்கு 70 ஆண்டுகள் நிறைவுபெறும் நிலையில், உலகளாவிய சவால்களின் காலத்தில் கூட்டு நடவடிக்கையின் விதமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் 2025 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் தினத்திற்காக இந்தச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

நாம் ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் இவை ஐக்கிய நாடுகள் சாசனத்தின் தொடக்க வரிகள் மட்டுமல்ல, அவை நாம் யார் என்பதை வரையறுக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபை ஒரு நிறுவனம் என்பதை விடவும் மேலானதாகும். இது ஒரு வாழும் வாக்குறுதியாக, எல்லைகளைத் தாண்டி, கண்டங்களை இணைத்து, தலைமுறைகளுக்கு எழுச்சியூட்டுகிறது.

எண்பது ஆண்டுகளாக, அமைதியைக் கட்டியெழுப்ப, வறுமை மற்றும் பசியைக் கையாள, மனித உரிமைகளை மேம்படுத்த, மற்றும் மிகவும் நிலைத்தன்மை வாய்ந்த உலகை உருவாக்க ஒன்றுபட்டு நாங்கள் உழைத்துள்ளோம்.

நாம் முன்னோக்கிச் செல்லும்போது, மோதல்கள் அதிகரித்தல், காலநிலைச் சீர்குலைவு, கட்டுப்பாடற்ற தொழில்நுட்பங்கள் மற்றும் நமது நிறுவனத்தின் இருப்புக்கான அச்சுறுத்தல்கள் போன்ற மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்கிறோம்.

இது கோழைத்தனம் அல்லது பின்வாங்குவதற்கான நேரமல்ல. இப்போது, முன்பை விட அதிகமாக, எந்த ஒரு நாடும் தனியாகத் தீர்க்க முடியாத பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உலகம் மீண்டும் உறுதிபூண வேண்டும்.இந்த ஐக்கிய நாடுகள் தினத்தில், நாம் ஒன்றாக நின்று, உங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் அசாதாரணமான வாக்குறுதியை நிறைவேற்றுவோம். “ மக்களாகிய நாம்”ஒன்றுபட்டுச் செயற்படுவதைத் தேர்ந்தெடுக்கும் போது சாத்தியமானது என்ன என்பதை உலகிற்குக் காண்பிப்போம் எந்த அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

w

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

March 5, 2026

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில்

cid

மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சாலே?

March 5, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019

cu

இருளில் மூழ்கியது கியூபா

March 5, 2026

கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை

sh

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது!

March 5, 2026

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

zo

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

March 5, 2026

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன்

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12

olugala

மோசடி ஒழிப்புப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

March 5, 2026

வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ASP ஓலுகல இன்று கடமையேற்பு! பாணந்துறை, வலான மத்திய ஊழல் ஒழிப்புச்

un

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. கடும் கண்டனம்

March 5, 2026

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

கனேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த