பாரிய பண மோசடி: கைது செய்யப்பட்ட பெண் 40 மில்லியன் ரூபாய் பிணையில் விடுவிப்பு

போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 66 வயதுடைய பெண் ஒருவரை, தலா 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல மன்னார் நீதிமன்றம் திங்கட்கிழமை (16) உத்தரவிட்டது.

கடந்த 2019 முதல் 2023 ஆம் ஆண்டு வரை தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்குப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட முக்கிய சந்தேக நபர் ஒருவர், அதன் மூலம் ஈட்டிய வருமானத்தில் ஒரு சொகுசு மாடிக் குடியிருப்பு, ஐந்து அறைகளைக் கொண்ட வீடு, ஒரு கார் மற்றும் சுமார் 360 பவுண் தங்க நகைகளை வாங்கியுள்ளதாகத் தகவல்கள் கிடைத்தன. இது குறித்து சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் சட்டவிரோத நிதியில் வாங்கியதாகக் கருதப்படும் வீடுகள் மற்றும் கார் என்பவற்றை முடக்குவதற்கு மன்னார் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலதிக விசாரணையில், முக்கிய சந்தேக நபரின் மாமியாரான குறித்த 66 வயதுப் பெண், சட்டவிரோத நடவடிக்கையின் மூலம் பெறப்பட்ட 360 பவுண் தங்க நகைகளை பல்வேறு நிதி நிறுவனங்களில் அடகு வைத்ததுடன், மன்னார் பகுதியிலுள்ள பல நகைக் கடைகளில் விற்றுள்ளமையும் கண்டறியப்பட்டது.

சட்டவிரோத சொத்துக்களின் தோற்றத்தை அறிந்திருந்தே அவற்றை மறைக்க உதவியமை மற்றும் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தமைக்காக, குறித்த பெண் ஞாயிற்றுக்கிழமை (15) கைது செய்யப்பட்டார்.

அவர், மன்னார் நீதவான் முன்னிலையில் திங்கட்கிழமை (16) ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை 40 மில்லியன் ரூபாய் (தலா 20 மில்லியன் வீதம் இருவர்) பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார். அத்துடன், இவ்வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் மே மாதம் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Ottawa

ஒட்டாவாவில் பனிப்புயலால் மின்வெட்டு; நெடுஞ்சாலைகளும் மூடல்

March 17, 2026

ஒட்டாவா–ஹெட்டினோ பகுதியை கடுமையான பனிப்புயல் தாக்கியதால் இன்று செவ்வாய்க்கிழமை காலை பத்தாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் மின்சாரம் இன்றி சிரமத்துக்காளாகினர் எனவும் நெடுஞ்சாலை

Manocha

பிரிட்டிஷ் கொலம்பியாவில் இந்திய மாணவன் கொலை!

March 17, 2026

இந்தியாவைச் சேர்ந்த ஒரு சர்வதேச மாணவர் கடந்த வெள்ளிக்கிழமை பிரிட்டிஷ் கொலம்பியா வடகிழக்கு பகுதியில் கொல்லப்பட்டுள்ளார். றோயல் கனேடியன் மவுண்டட்

Pera

நாட்டில் அதிகரித்த வெப்பநிலையிலிருந்து தப்புவது எப்படி?

March 17, 2026

நாட்டில் அதிகரித்த வெப்பநிலையால் சிறுவர்கள், நோயாளர்கள், வயோதிபர்கள் அவதானமாக இருக்கவேண்டும் என யாழ். போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர்

nalintha-1

பொதுப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படுகின்றது

March 17, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை முகாமைத்துவம் செய்யும் வரை, நாளை (18) முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுப் போக்குவரத்துச் சேவைகளை

Publi

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை; புதிய சுற்றுநிருபம் வெளியீடு

March 17, 2026

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையின் கீழ் எரிபொருள் இருப்புகளை சேமிப்பதற்காக, அரச அலுவலகங்களை நடாத்திச் செல்வது குறித்து பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள்,

Ali Larijani

ஈரானின் முக்கிய பாதுகாப்புத் தலைவர் பலி

March 17, 2026

ஈரானின் முக்கிய பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி (Ali Larijani) கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அவர்

Education

தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு கோரிக்கை

March 17, 2026

புதன்கிழமைகளில் தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு கோரிக்கை ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அரச பாடசாலைகளுக்கு விடுமுறை

heal

எரிபொருள் நெருக்கடி; சுகாதார அமைச்சின் சில பிரிவுகளுக்கு ’வீட்டிலிருந்து வேலை’

March 17, 2026

சர்வதேச ரீதியில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டில் எரிபொருள் நுகர்வைக் குறைக்கும் அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க, சுகாதார

jud

பாரிய பண மோசடி: கைது செய்யப்பட்ட பெண் 40 மில்லியன் ரூபாய் பிணையில் விடுவிப்பு

March 17, 2026

போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 66 வயதுடைய பெண் ஒருவரை,

alagana

பம்பரக்கலை கிராமத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகள்

March 17, 2026

‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமான ‘நாட்டை மேம்படுத்தும் அழகான கிராமம்’ எனும் கருப்பொருளின்

Omar hospital

காபூல் மருத்துவமனை மீது வான்வழித் தாக்குதல் : 400 பேர் பலி

March 17, 2026

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைகளுக்கு இடையே கடந்த மூன்று வாரங்களாக நீடித்து வரும் மோதல், தற்போது பெரும் மனிதநேயப் பேரழிவாக

ca

300-க்கும் மேற்பட்ட கேபிள் டிவி உரிமையாளர்கள் பாதிப்பு

March 17, 2026

இலங்கையில் இரு பிரதான நிறுவனங்களின் சுயநலப் போக்கினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கேபிள் தொலைக்காட்சி சேவை உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.