பாதுக்கை – மாதுலாவ பகுதியில், சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உபகரணங்ளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹோமாகம பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, நேற்று கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2,268 லீற்றர் கோடா (12 பீப்பாய்கள்) மற்றும் சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் பாதுக்கை – மாதுலாவ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பாதுக்கை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.