எமது நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு என்பன ஏற்பட்டது இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள் மற்றும் மீட்பு சேவைகளுக்காக அமெரிக்காவின் C130 விமானங்கள் இரண்டும் 60 பேர் கொண்ட குழுவினரும் 2025.12.07 முதல் 2025.12.13 வரை எமது நாட்டில் பணியாற்றினர். இவர்கள் கட்டுநாயக்க மற்றும் ரத்மலான விமானப்படை தளங்களில் இருந்து யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் மத்தள, அம்பாறை மற்றும் அனுராதபுரம் ஆகிய அம்பாறை மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணப் பொருட்களை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று (2025 டிசம்பர் 14) அவர்களின் பணியை நிறைவு செய்து ஓர் விமானமும் அதன் பணியாளர்களும் நாட்டை விட்டு புறப்பட்டனர்.
அதேபோன்று எமது அன்றைய நாடான இந்தியாவின் இரண்டு ஹெலிகாப்டர்கள் இந்த அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக வேண்டியும் அவர்களுக்கான நிவாரணங்களை கொண்டு செல்வதற்காக வேண்டியும் இலங்கை வந்து பணியாற்றி மீண்டும் நாட்டை விட்டு புறப்பட்டது.
அதன் பின்பு இன்னுமொரு இந்திய எம் ஐ 17 ஹெலிகாப்டர் கடந்த 2025 டிசம்பர் 08ம் திகதி நாட்டிற்கு வந்து மீட்பு பணிகள் மற்றும் அனர்த்த சேவை பணிகளில் ஈடுபட்டது அந்த ஹெலிகாப்டர் விமானமும் இன்று 2025 டிசம்பர் 14 பணிகளை நிறைவு செய்து நாட்டை விட்டு புறப்பட்டது.
எமது நாடு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட எமக்காக உதவி கரம் நீட்டிய இந்திய மற்றும் அமெரிக்க விமானங்கள் மற்றும் மற்றும் பணியாளர்களை வழி அனுப்பி வைப்பதற்காக இலங்கை விமானப்படையின் தலைமை தளபதி எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர மற்றும் மூத்த விமானப்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் வருகை தந்து இருந்தனர். அமெரிக்க மற்றும் இந்திய பணியாளர்களுக்கு தங்களுடைய நன்றிகளையும் தெரிவித்து அவர்களை வழி அனுப்பி வைத்தனர்.
By C.G.Prashanthan