பாதிக்கப்பட்ட மக்களுக்கான தொடர் பணியில் முப்படையினரும் அரச நிறுவனங்களும்

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகள் மற்றும் சேதமடைந்த உட்கட்டமைப்பை மீட்டெடுப்பதற்காக முப்படையினரும் அரச நிறுவனங்களும் தொடர்ந்து செயற்பட்டு வருவதாக இராணுவ மற்றும் விசேட அனர்த்த செயற்பாட்டு மத்திய நிலையத்தின் ஊடக பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளுக்காக முப்படைகளைச் சேர்ந்த மொத்தம் 39,000 படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், இலங்கைக்கு உதவி செய்ய வந்த ஐக்கிய அரபு ராச்சியம், பாகிஸ்தான், இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை சேர்ந்த மருத்துவ மற்றும் மீட்பு குழுக்களும், அமெரிக்க விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு C-150 விமானங்களும் தொடர்ந்து நிவாரண சேவைகளை வழங்கி வருகின்றன.

கிடைக்கப்பெற்ற தகவலின்படி, அனர்த்தம் காரணமாக நாடு முழுவதும் சுமார் 17,37,330 பேர் தற்போது இடம்பெயர்ந்துள்ளனர்.

தற்போது மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்புவதால், நாடு முழுவதும் நிறுவப்பட்ட பாதுகாப்பு நிலையங்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகின்றது. ஆரம்பத்தில் 1,529 ஆக இருந்த பாதுகாப்பு நிலையங்கள், தற்போது 630 ஆக குறைவடைந்துள்ளதுடன்,

தற்போது சுமார் 63,628 பேர் அங்கு தங்கியுள்ளனர். நேற்று மாலை 4.00 மணி வரை கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, அனர்த்தம் காரணமாக 638 பேர் இறந்துள்ளதாகவும், சுமார் 197 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராதனை பதுளை செங்கலடி வீதி மற்றும் கம்பளை நாவல்பிட்டி வீதி ஆகியவை மண் சரிவு காரணமாக மூடப்பட்டுள்ளன. அதேவேளை, பரந்தன் முல்லைத்தீவு பாலம் உடைந்துள்ளமையால், மூடப்பட்டுள்ளதுடன், ஏனைய அனைத்து ஏ தர வீதிகளும் போக்குவரத்துக்காக முழுமையாகவோ அல்லது பகுதி அளவாகவோ திறக்கப்பட்டுள்ளன.

மத்திய மாகாணத்தில் மின்சார விநியோகம் 95 வீதமாக மூடப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டிருந்த 152 நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் 141 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வழமை நிலைக்கு திரும்பியுள்ளன. மேலும், நாடு முழுவதிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,225 கிணறுகள் மற்றும் 90 பாடசாலைகளை முப்படை வீரர்களினால் சுத்தம் செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு ஏற்றதாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

up

தோட்ட உதவி அத்தியட்சகருக்கு எதிராக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

March 3, 2026

கொட்டகலை, யுலிபீல்ட் தோட்ட உதவி அத்தியட்சகருக்கு எதிராக குறித்த தோட்டத் தொழிலாளர்கள் நேற்று திங்கட்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். குறித்த

Suresh orema

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளை ஆரம்பிக்க உரிய அழுத்தங்களை வலுவாகப் பிரயோகிக்க வேண்டும் – சுரேஷ் பிரேமசந்திரன்

March 3, 2026

மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துவதற்கும், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளை ஆரம்பிப்பதற்கும் உரிய அழுத்தங்களை வலுவாகப் பிரயோகிக்கவேண்டிய பொறுப்பு சகல தரப்பினருக்கும் இருப்பதாக

Thumi_1

இன்று நாட்டில் அரசியல் இலாபத்திற்காகவே மத – இன அடையாளங்கள் பயன்படுத்தப்படுகின்றன – துமிந்த நாகமுவ

March 3, 2026

இன்று நாட்டில் பெரும்பான்மையாகச் சிங்கள பௌத்தர்கள் இருப்பதனால் சிங்கள பௌத்த அடையாளத்தை முன்னிறுத்தியே நாமல் ராஜபக்ஷ அரசியல் செய்வதாக முன்னிலை

ud

குவைத்தின் வான் பாதுகாப்புப் படையினரால் அமெரிக்க விமானங்கள் சுடப்பட்டதா?

March 3, 2026

வைத்தின் வான் பாதுகாப்புப் படையினரால் அமெரிக்காவின் மூன்று F-15E ஸ்டிரைக் ஈகிள் போர் விமானங்கள் தவறுதலாகச் சுடப்பட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க

arrest

போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

March 3, 2026

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்தில் குஷ் ரக போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை (02)

death-pictures-4i5d2eg6pdb913xl

யாழ் குடத்தனையில் இளைஞன் தற்கொலை?

March 3, 2026

யாழ்ப்பாணம், குடத்தனை வலிக்கண்டிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த இளைஞர் ஒருவர், தன் உயிரை மாய்த்துக்

Duba

மூடப்பட்டிருந்த டுபாய் விமான நிலையங்கள் மீண்டும் திறப்பு

March 3, 2026

ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக மூடப்பட்டிருந்த டுபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் மக்தூம் சர்வதேச விமான

Mano

ஜனாதிபதி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி செயலில் முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டும் – மனோகணேசன்

March 2, 2026

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க என்ற ஒற்றைச் சில்லை வைத்துத்தான் ஒட்டுமொத்த அரசாங்கமும் ஓடுகிறது. அவர் யாழ்ப்பாணத்துக்குச் செல்கிறார். அங்கு நடைப்பயிற்சி

s

ஸ்பெயினில் உள்ள அமெரிக்கத் தளங்களைப் பயன்படுத்த அந்நாட்டு அரசாங்கம் தடை

March 2, 2026

ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஸ்பெயினில் உள்ள அமெரிக்கத் தளங்களைப் பயன்படுத்த அந்நாட்டு அரசாங்கம் தடை

china ir

ஈரானுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக சீனா அறிவிப்பு

March 2, 2026

மத்திய கிழக்கில் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில். ஈரானுக்கு ஆதரவாக சீனா கருத்து வௌியிட்டுள்ளது. ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும்

Nirmalan

தமிழர்களின் பூர்வீக கிராமத்தை முஸ்லிம் கிராமம் என பெயர் சூட்டி அபகரிக்க முயற்சி – தனபாலசிங்கம் நிர்மலன்

March 2, 2026

தனித் தமிழ் மக்கள் வாழும் வாழைச்சேனை கொண்டையங்கேணி கிராமம் இன்று கொண்டயன்கேணி முஸ்லிம் கிராமம் என்று உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழர்களுடைய

sa

எதிர்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு

March 2, 2026

எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கான அவசர கூட்டம் ஒன்றுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டமானது பாராளுமன்றத்தில் அமைந்துள்ள