நாட்டில் அசாதாரண காலநிலையால் ஏற்பட்ட வெள்ள நீர் மற்றும் மண்சரிவுகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்குவதற்கு விவேகா பயிற்சி நிலையம் வெள்ள நிவாரண பணிகளை முன்னெடுத்துள்ளது.
அதன் முதல் கட்டமாக நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்ட மலையக பிரதேசங்களுக்கு விநியோகிப்பதற்கு பொதி செய்யும் வேலைகள் கடந்து ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்றது.
அவ்வேளை விவேகா பயிற்சி நிறுவனத்தின் நிறுவனர் K. T. குருசாமி அவர்கள் கருத்துரைக்கும் போது அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலியையும் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தில் விவேகா பயிற்சி நிலையம் பங்கு கொள்வதாகவும் இந் நாட்டில் இதுவரை ஏற்படாத பாரிய அனர்தம் ஏற்பட்டுள்ளதெனவும் இந்த அனர்த்தத்தில் இருந்து மக்களை மீட்டெடு க்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மேற்கொள்ளும் சகல நடவடிக்கைகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக விவேகா பயிற்சி நிலையம் சார்பில் வர்த்தகர்கள் நண்பர்கள் நலன் விரும்பிகள் மற்றும் சமூக ஆர்வகளரிடம் நிவாரண பொருட்கள் வழங்க வேண்டுகோள் விடுத்தோம் எனவும் எமது வேண்டுகோளுக்கிணங்க அதிகளவான நிவாரண பொருட்கள் (உலர் உணவு பொருட்கள், படுக்கை விரிப்புக்கள், பாய்கள், குழந்தைகள் பெண்களுக்கான நாப்கின் வகைகள், துவாய்க்கள், )கிடைத்ததாகவும் நிவாரண பொருட்களை அளித்த அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
இந்த நிவாரண பொருட்கள் இன்னும் 2, 3 ,தினங்களுக்குள் மலையக பிரதேசங்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் மீண்டெளுந்து தங்களது இயல்பு வாழ்கைக்கு திரும்ப வேண்டும் என இறைவனை பிராத்திப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து விவேகா பயிற்சி நிலையத்தின் தலைவர் த பழ புஷ்பநாதன் கருத்து தெரிவிக்கையில், அடை மழை ஆரம்பித்து கொழும்பு நகரில் சில பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த வேளையில் தெமடகொடை, வெல்லம்பிடிய,மட்டக்குளிய பிரதேசங்களில் இருந்து உணவு பொதிகள் அவசரமாக தேவைபடுவதாக தனக்கு தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும் உடனடியாக தனது சொந்த நிதியில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உணவு பொதிகளை வழங்கியதாகவும் தொடர்ந்து யட்டியாந்தோட்டை கராகொட பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் கடந்த 04ந் திகதி பௌர்ணமி தினமன்று எமது குழுவினருடன் சென்று வழங்கியதாகாவும் நிவாரண பொருட்ளை தன்னுடைய வேண்டுகோளுக்கிணங்க கையளித்த அணைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
அன்றைய பொதியிடும் நிகழ்வில் விவேகா பயிற்சி நிலையத்தின் செயலாளர் துரை. ராஜரட்ணம் பொருளாளர் s. u. சத்தியமூர்த்தி சமுக ஆர்வலர்கள் செல்வரட்ணம், வேல்முருகன் , அசோகன் ஆகியோரும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.