வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்குள் நுழைந்து சொத்துக்களை சூறையாடியதாகக் கூறப்படும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் உதய குமார வுட்லர் தெரிவித்தார்.
பத்தரமுல்ல சுஹுருபாய காவல்துறை ஊடகப் பிரிவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் 2,427 சாலை விபத்துகளில் 2,570 பேர் உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.