ஜப்பான் தூதுவர் அகியோ இசொமட்டா, “அடிமட்ட மனித பாதுகாப்பு திட்டங்களுக்கான மானிய உதவி (GGP)” திட்டத்தின் கீழ் திட்டத்திற்கு நன்கொடை வழங்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார். இந்த உடன்படிக்கை திமுது சமூக அபிவிருத்து சங்கத்தின் தலைவர் சங். நாகொல்லே நந்தரத்ன தேரருடன் கைச்சாத்திடப்பட்டது.
ஜப்பான் அரசு திமுது சமூக அபிவிருத்து சங்கம் செயல்படுத்தும் திட்டத்திற்கு 25,432 அமெரிக்க டொலர்களை (சுமார் ரூ. 7.8 மில்லியன்) வழங்கியுள்ளது. இந்தத் திட்டம் தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பாலமொன்றை கட்டுறுதியாக பலப்படுத்தவும் மற்றும் பாலத்தை பாதுகாக்கும் முகமாக காப்பு சுவர் ஒன்றை அமைப்பதற்கும் நிதியுதவி வழங்கும். இது 3,200 குடியிருப்பாளர்களின் கல்வி மற்றும் சுகாதார சேவைகளுக்கு பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்யும்.
இலங்கையின் இயற்கை பேரழிவுகள் மீட்பு பணியில் நிறுவன கட்டமைப்புகளை வலுப்படுத்த ஜப்பான் கவனம் செலுத்துவதை வலியுறுத்தி தூதுவர் ISOMATA தெரிவிக்கையில்,
தற்போது இலங்கை மீட்பு மற்றும் மீளமைப்பு கட்டத்தை அடைந்துள்ளதால், ஜப்பான் இலங்கை மக்களிற்கு துணை நிற்பதில் உறுதியாக உள்ளது. நாம் இன்று கைச்சாத்திட்ட திட்டம், டிட்வா சூறாவளியால் பாதிப்படைந்த பகுதிகளின் மீட்பு, மீள் புனரமைப்பு மற்றும் நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், ஜப்பான் மற்றும் இலங்கை மக்களிடையே நிலைத்திருக்கும் நட்புறவை நீடிக்கும் சின்னமாகவும் திகளும் என்றார்.