விசாரணைகள் முடியும் வரை பல்லேகம ஹேமரத்ன தேரர் அட்டமஸ்தானாதிபதி பதவியிலிருந்து விலகி முன்மாதிரியாகச் செயற்பட வேண்டும் என கலகொட அத்தே ஞானசார தேரர் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பு ராஜகிரியகில் வெள்ளிக்கிழமை (29) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
தவறு யார் செய்தாலும் அது தவறே. அது சிறியதோ அல்லது பெரியதோ என்பதல்ல முக்கியம். தவறு ஒன்று நிகழ்ந்திருந்தால், அதற்கான சட்ட ரீதியான நடைமுறைகள் உள்ளன. அந்த நடைமுறைகளுக்குச் சென்ற போதிலும், அதிலிருந்து மக்கள் திருப்தியடையும் வகையில் விடயங்கள் இடம்பெறவில்லை என்றே தோன்றுகிறது. தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கள் மற்றும் விமர்சனங்கள் காரணமாக ஒட்டுமொத்த பௌத்த சங்க சமூகமும், ஒரு நிறுவனமும் இலக்கு வைக்கப்படுவது ஏற்புடையதல்ல. குறிப்பாக, இந்த வெசாக் பௌர்ணமி காலப்பகுதியில் இவ்வாறான சம்பவங்கள் பேசுபொருளாக இருப்பது கவலையளிக்கிறது என்று கூறியுள்ளார்.