பருத்தித்துறை நகரசபை ஏல்லைக்குள் வெடி கொழுத்துவோருக்கு எதிராக இனி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகரசபை எல்லைக்குள் பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படும் வகையிலும், சூழலை மாசுபடுத்தும் வகையிலும் பொது இடங்களில் வெடிக்கொழுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பருத்தித்துறை நகரசபை அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதியில்(01.11.2025) இருந்து இந்த நடவடிக்கை நடைமுறைக்கு வரவுள்ளது.