பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலத்தை வரைவதற்காக நியமிக்கப்பட்ட குழுவானது, நீதி அமைச்சரிடம் கையளித்துள்ள அறிக்கையையும் வரைவு சட்டமூலத்தையும் பகிரங்கப்படுத்துமாறு அரசாங்கத்தையும் குறிப்பாக நீதி அமைச்சரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என சர்வ ஜன நீதி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இன்றைய தினம் (14) சர்வ ஜன நீதி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலத்தை வரைவதற்காக நியமிக்கப்பட்ட குழு அதன் அறிக்கையையும் வரைவு சட்டமூலத்தையும் நீதி அமைச்சரிடம் கையளித்துள்ளதாக செய்தி அறிக்கைகளைப் பார்த்தோம்.
1979 ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம், நீண்ட காலமாக சட்டப் புத்தகங்களிலிருந்து நீக்கப்பட வேண்டிய ஒரு கொடூரமான சட்டமாக உலகளவில் கருதப்படுகிறது. சர்வ ஜன நீதி அமைப்பு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக இரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து குரலெழுப்பி வருகிறது.
NPP தேர்தல் அறிக்கையும் அதை முழுமையாக நீக்குவதாக உறுதியளிக்கிறது. புதிய வரைவு சட்டமூலம் இந்த வாக்குறுதியை முழுமையாக பிரதிபலிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
அரசாங்கத்தையும், குறிப்பாக நீதி அமைச்சரையும், மேற்கூறிய அறிக்கையையும் வரைவு சட்டமூலத்தையும் பகிரங்கப்படுத்துமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட அறிக்கையில் கையெழுத்திட்டவர்கள்:
1. பேராசிரியர் ஜெயதேவா உயங்கொட
2. கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன, PC
3. ஏரான் விக்கிரமரத்ன
4. ஏ.எம்.ஃபாயிஸ்
5. எம் ஏ சுமந்திரன், PC
6. சாணக்கியன் இராசமாணிக்கம், பாட
7. பவானி பொன்சேகா
8. எர்மிசா டெகல்
9. நடிஷாணி பெரேரா
10. ஜெருஷா க்ரொசெட் தம்பையா
11. ஸ்வஸ்திகா அருலிங்கம்
12. ரவிந்திரன் நிலோஷன்
13. பெனிஸ்லோஸ் துஷான்