பம்பலப்பிட்டி திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் மடத்தின் மாணவி அனன்யாவுக்கு 4 சம்பியன் பட்டங்கள்

இலங்கை டென்னிஸ் சங்கத்தினால் நடத்தப்பட்ட இலங்கை டென்னிஸ் சங்க யெட்டி (Yeti) கடினதரை சம்பியன்ஷிப்பில் பம்பலப்பிட்டி திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் மடம் பாடசாலை மாணவி அனன்யா நோபட் 4 சம்பியன் பட்டங்களை சுவீகரித்து அசத்தினார்.

அத்துடன் நின்று விடாமல் ஓர் உப சம்பியன் பட்டத்தையும் வென்றெடுத்து டென்னிஸ் பிரியர்களைப் பிரமிக்கவைத்தார்.

பதினான்கு வயதே நிரம்பிய அனன்யா 3 ஒற்றையர் சம்பியன் பட்டங்களையும் ஓர் இரட்டையர் பட்டத்தையும் சுவீகரித்தார்.

பாடசாலை மாணவி ஒருவர் ஒரே டென்னிஸ் சம்பியன்ஷிப்பில் அதிக சம்பியன் பட்டங்களை வென்றெடுத்தது இதுவே முதல் தடவையாகும்.

இதன் மூலம் தான் கல்வி கற்கும் பம்பலம்பிட்டி திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் மடம் பாடசாலைக்கு பெருமையையும் புகழையும் அனன்யா பெற்றுக்கொடுத்துள்ளார்.

16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில் தன்னைவிட ஒரு வயது மூத்தவரான சந்திதி உஸ்கொடஆராச்சியை 6 – 1, 6 – 2 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 நேர் செட்களில் அனன்யா நோபட் வெற்றிகொண்டு சம்பியன் பட்டத்தை சூடினார்.

18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான இறுதிப் போட்டியில் நீர்கொழும்பு ஆவே மரியா கன்னியாஸ்திரிகள் மடம் பாடசாலை வீராங்கனை 16 வயதுடைய ஜித்மி பெர்னாண்டோவை எதிர்த்தாடிய அனன்யா நோபட் 6 – 2, 6 – 0 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 நேர் செட்களில் வெற்றிபெற்று சம்பியனானர்.

தொடர்ந்து பெண்களுக்கான (பகிரங்க பிரிவு) இறுதிப் போட்டியில் 17 வயதான வினெத்யா தர்மரட்னவை சந்தித்த அனன்யா நோபட் 6 – 2, 6 – 2 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 நேர் செட்களில் வெற்றிபெற்று மூன்றாவது ஒற்றையர் சம்பியன் பட்டத்தை வென்றெடுத்தார்.

18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான இரட்டையர் போட்டியிலும் அனன்யா நோபட்டுக்கு மேலும் ஒரு சம்பியன் பட்டம் கிடைத்தது.

பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் வினெத்யா தர்மரட்னவுடன் ஜோடி சேர்ந்து விளையாடிய அனன்யா நோபட் இறுதிப் போட்டியில் கெஹன்சா மெத்னதி, துல்கினி ரணசிங்க ஜோடியினரை 6 – 4, 6 – 4 என்ற புள்ளிகளைக் கொண்ட இரண்டு நேர் செட்களில் வெற்றிகொண்டு சம்பியனானார்.

பெண்களுக்கான இரட்டையர் போட்டியில் அனன்யாவுக்கு உப சம்பியன் பட்டமே கிடைத்தது.

இறுதிப் போட்டியில் துவினி டி சில்வா – பியன்கா அக்விஸ்டாபேஸ் ஜோடியினருக்கு பலத்த சவாலாக விளையாடிய அனன்யா நோபட் – வினெத்யா தர்மரட்ன ஜோடியினர் 6 – 7, 4 – 6 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 நேர் செட்களில் தோல்வி அடைந்து இரண்டாம் இடத்தைப் பெற்றனர்.

Mano

ஜனாதிபதி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி செயலில் முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டும் – மனோகணேசன்

March 2, 2026

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க என்ற ஒற்றைச் சில்லை வைத்துத்தான் ஒட்டுமொத்த அரசாங்கமும் ஓடுகிறது. அவர் யாழ்ப்பாணத்துக்குச் செல்கிறார். அங்கு நடைப்பயிற்சி

s

ஸ்பெயினில் உள்ள அமெரிக்கத் தளங்களைப் பயன்படுத்த அந்நாட்டு அரசாங்கம் தடை

March 2, 2026

ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஸ்பெயினில் உள்ள அமெரிக்கத் தளங்களைப் பயன்படுத்த அந்நாட்டு அரசாங்கம் தடை

china ir

ஈரானுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக சீனா அறிவிப்பு

March 2, 2026

மத்திய கிழக்கில் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில். ஈரானுக்கு ஆதரவாக சீனா கருத்து வௌியிட்டுள்ளது. ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும்

Nirmalan

தமிழர்களின் பூர்வீக கிராமத்தை முஸ்லிம் கிராமம் என பெயர் சூட்டி அபகரிக்க முயற்சி – தனபாலசிங்கம் நிர்மலன்

March 2, 2026

தனித் தமிழ் மக்கள் வாழும் வாழைச்சேனை கொண்டையங்கேணி கிராமம் இன்று கொண்டயன்கேணி முஸ்லிம் கிராமம் என்று உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழர்களுடைய

sa

எதிர்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு

March 2, 2026

எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கான அவசர கூட்டம் ஒன்றுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டமானது பாராளுமன்றத்தில் அமைந்துள்ள

val

வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட முயன்ற நபரை வாளினால் வெட்டி விரட்டிய வீட்டின் உரிமையாளர்!

March 2, 2026

களுத்துறை பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து உரிமையாளரை நோக்கித் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்த முயன்ற இனந்தெரியாத நபர் ஒருவர், வீட்டின்

d

அவசரகால நிலை நீடிப்பு

March 2, 2026

இலங்கையில் பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, இந்த அவசரகால நிலைமை பெப்ரவரி

hga

எரிவாயு விலை சர்வதேச சந்தையில் உயர்ந்தது!

March 2, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் எரிவாயு விலைகள் செங்குத்தாக உயர்ந்துள்ளன. ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக

ar

திருமலையில் மாணவர்களின் வெளிப்புற ஓவியப் பயிற்சி

March 2, 2026

திருகோணமலை நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டைப் பகுதியை அண்மித்த இடத்தில் ASP சித்திரக் கலைக்கூடத்தில் கற்கும் மாணவர்கள் இன்று திங்கட்கிழமை

sc

பஞ்சாபில் இரண்டு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

March 2, 2026

பஞ்சாபில் 2 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் உள்ள இரண்டு பள்ளிகளுக்கு

san

மௌனம் காக்கும் விஜய்; மாதர் சங்கம் கடும் கண்டனம்!

March 2, 2026

டிகரும் தவெக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு

s

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

March 2, 2026

காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது எதிர்வரும் 06.03.2025 அன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுபம் கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான