பனிப்புயல் கொட்டுவதால் அமெரிக்காவில் 5.5 கோடி பேர் பாதிப்பு

அமெரிக்காவின் பெரும்பாலான நகரங்களை பனி மூழ்கடித்துள்ள நிலையில், ஒரே வாரத்தில் மூன்றாவது பனிப்புயல் உருவாக்கி உள்ளது. இது ‘பாம் சைக்ளோன்’ எனப்படும் அதி தீவிர பனி புயலால் 5.5 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அமெரிக்காவில் நவம்பர் துவங்கி மார்ச் வரை குளிர்காலம் நீடிக்கும். இந்த சமயத்தில் அமெரிக்காவை கடும் பனிப்புயல்கள் தாக்கும். வெப்பநிலை மைனஸ் 10 முதல் மைனஸ் 25 டிகிரி செல்ஷியஸ் வரை சரியும். நியூயார்க், மாசசூசெட்ஸ், பென்சில்வேனியா, மைனே போன்ற வட கிழக்கு மாகாணங்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படும்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரு பனிப்புயல்கள் அமெரிக்காவை தாக்கி உள்ளன. 33 சதவீத பரப்பை பனி மூடியுள்ளது. கடந்த 2019ல் இதே காலக்கட்டத்தில் 41 சதவீத அமெரிக்க நிலப்பரப்பு பனியால் மூடியிருந்தது. தற்போது வீசும் பனிப்புயலால், கொலராடோ மாகாணத்தின் ராக்கி மலைப்பகுதியில் ஒரு அடி உயரத்திற்கு பனி விழுந்ததாக தேசிய வானிலை சேவை தெரிவித்துள்ளது.

கன்சாஸ் சிட்டியில் 10 செ.மீ., அளவும், செயின்ட் லுாயிசில் 7 செ.மீ., அளவும் பனி பதிவாகியுள்ளது. செயின்ட் லுாயிஸ் நகரில் பனி படர்ந்ததன் காரணமாக, நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் பல விபத்துகள் நேற்று ஏற்பட்டன. மிகுந்த கவனத்துடன் வாகனத்தை இயக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய பனிப்புயல் ஒன்று நேற்று அதி தீவிர பனிப்புயலாக உருவாகியுள்ளது. காற்றின் அழுத்தம் மில்லிபார் என்ற அளவீட்டின்படி கணக்கிடப்படுகிறது. 24 மணிநேரத்தில் 24 மில்லிபார் அளவுக்கு காற்றழுத்தம் குறைந்தால் அது ‘பாம் சைக்ளோன்’ எனப்படும் அதி தீவிர புயலாக கருதப்படும். அதி தீவிர பனி புயலால் 5.5 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அமெரிக்காவின் வடமேற்கில் மோண்டானா துவங்கி கிழக்கு கடற்கரையில் உள்ள மைனே வரை 2,500 கி.மீ., நீளத்துக்கு 27 மாகாணங்களுக்கு அதிதீவிர பனிப்புயல் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.

பயணங்களை தவிர்க்கவும், உணவு, தண்ணீர், மருந்து ஆகியவற்றை சேமிப்பில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் கடும் பனிப்புயலால் பாதிக்கப்பட்டு உள்ளன.

fr

பிரான்சில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வுக்குள் புகுந்த காரால் 10 பேர் பலி

December 6, 2025

பாரிஸ்: பிரான்சில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட கூட்டத்திற்குள் அதிவேகமாக கார் புகுந்ததில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

dol

‘FIFA சமாதான விருது’டொனால்ட் டிரம்பிற்கு…

December 6, 2025

டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான விருது’ வழங்கப்பட்டது சர்வதேச கால்பந்து சம்மேளனத்தினால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான

mod

இறையாண்மையுடன் கூடிய சுதந்திரமான கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது!

December 6, 2025

இறையாண்மையுடன் கூடிய சுதந்திரமான கொள்கையை பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு பின்பற்றி வருவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்

vija

உலகின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கையை மிகவும் இழிவாக கருதுவதாகவே தென்படுகின்றது

December 6, 2025

உலகின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கையை மிகவும் இழிவாக கருதுவதாகவே தென்படுகின்றது என முன்னாள் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச

ca

வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை

December 6, 2025

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பெய்த கடும் மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் கந்தப்பளை பிரதேசத்தில் உள்ள

v

உயிரிழந்த விலங்குகளை கையாள்வது குறித்த முக்கிய வழிகாட்டுதல்கள்

December 6, 2025

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட மோசமான வானிலை மற்றும் வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, , இறந்த விலங்குகளைப் பாதுகாப்பாகக் கையாள்வது குறித்த

central-bank

மத்திய வங்கி விசேட அறிவிப்பு

December 6, 2025

அண்மையில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு பேரனர்த்தங்களின் மோசமான விளைவுகளைக் கருத்திற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வினைத்திறன்மிக்க நிவாரணத்தை வழங்குவதற்காக, இலங்கை மத்திய

Dead

காணிப் பிரச்சினை; ஒருவர் பலி

December 6, 2025

காணிப் பிரச்சினை காரணமாகத் தாக்குதலில் ஒருவர் பலி மொரகஹஹேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோனபலை பிரதேசத்தில், காணி எல்லைப் பிரச்சினை தொடர்பாக

ditva

வெள்ளப் பேரழிவைத் தொடர்ந்த கழிவுகள் சுற்றாடல் அமைச்சு வெளியிட்ட தகவல்

December 6, 2025

சமீபத்திய வெள்ளப் பேரழிவைத் தொடர்ந்து பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் அகற்றப்படுவது அதிகரித்துள்ளது. இருந்த போதிலும், தற்போது வரையில் பிராந்திய

ran

மின் பரிமாற்ற அமைப்பு தொடர்பில் வௌியான அறிவிப்பு

December 6, 2025

ரன்தெம்பே – மஹியங்கனை மின் பரிமாற்ற அமைப்பு தொடர்பில் வௌியான அறிவிப்பு டித்வா புயலின் தாக்கம் காரணமாக செயலிழந்த ரன்தெம்பே

siva

சிவனொளிபாத மலை யாத்திரை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

December 6, 2025

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

sanakkiyan

நிவாரண உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் பொறிமுறை வேண்டும் – சாணக்கியன்

December 6, 2025

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அரசாங்கம் துரிதமான பொறிமுறை ஒன்றை உருவாக்க