கியூபெக்கின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ’லெ மாசிஃப் டி சார்லிவோக்’ (Le Massif de Charlevoix) பனிச்சறுக்கு விடுதி ஊழியர்கள், இன்று முதல் காலவரையற்ற பொது வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.
ஊதிய உயர்வு மற்றும் பணிப்பாதுகாப்பு தொடர்பாக நிர்வாகத்துடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 400 ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம், நிர்வாகத்தின் சமீபத்திய ஒப்பந்த வாய்ப்பை நிராகரித்துள்ளது.
குளிர்காலச் சுற்றுலா உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில் இந்த வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளதால், பனிச்சறுக்கு விடுதி நிர்வாகம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் தற்காலிகமாகப் பணியமர்த்துவதைக் குறைத்து, உள்ளூர் ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் அந்த தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.