பண்டைய தமிழ் புத்த மரபின் மீதமுள்ள சாட்சிகளே தாயகத்திலுள்ள புத்தச் சின்னங்கள் – காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்

தமிழ் தாயகத்தில் காணப்படும் எந்த புத்தச் சின்னங்களும் சிங்கள புத்த மதத்திலிருந்து தோன்றியவை அல்ல. அவை அனைத்தும் பண்டைய தமிழ் புத்த மரபின் மீதமுள்ள சாட்சிகள் என தமிழர் தாயக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்தார்.

வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் நேற்று (25.12.2025) மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் இந்த கிறிஸ்மஸ் தினத்தில் சர்வதேசத்திற்கு ஒரு செய்தியை கூறுவதாக தெரிவித்து அவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது சங்கத்தின் செயலாளர் கோ. ராஜ்குமார் கருத்து தெரிவிக்கையில்,

இந்தக் கிறிஸ்துமஸ் தினத்தில், அனைத்து தமிழர்களிடமும் ஒரு பணிவான, தெளிவான வேண்டுகோளை வைக்கிறோம். எமது மண்ணிலுள்ள எமது உண்மையான வரலாற்றை கற்றுக்கொள்வோம். எமது இளம் தலைமுறைக்கு அதை கற்பிப்போம்.

சிங்கள இன அடையாளம் உருவாக்கப்படுவதற்கு முன்பே, இந்தத் தீவில் தமிழர்கள் வாழ்ந்தனர். இந்தத் தீவு, தமிழ் நாட்டுடன் இணைந்த தமிழகம் என்ற பரந்த நாகரிகப் பரப்பின் ஒரு பகுதியாக இருந்தது.

சங்க காலம் முதல், சைவத் தமிழர்களும் தமிழ் புத்தர்களும் இந்தத் தீவின் நாகரீக வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தனர். தமிழ் புத்தமதம் ஒரு இன அடையாளம் அல்ல.

அது ஒரு தமிழ் பண்பாட்டு மற்றும் ஆன்மீக மரபு. பின்னர், மத நிறுவனங்களில் ஏற்பட்ட ஒழுக்கச் சீர்கேடுகள் மற்றும் அரசியல் தலையீடுகளால், பல தமிழ் புத்தர்கள் மீண்டும் சைவத்திற்குத் திரும்பினர்.

ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், வட இந்திய வணிகர்கள், இயக்கர் மற்றும் நாகர் குழுக்கள், மேலும் சில தென்னிந்திய வணிகக் குழுக்கள் இணைந்து, பின்னர் சிங்கள புத்த அடையாளமும் சிங்கள மொழியும் உருவானது என்பது வரலாற்று ஆய்வுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்