பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் இன்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீ விபத்தால் விமான நிலையத்தில் விமான சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது. டாக்கா விமான நிலையம் வரவிருந்த விமானங்கள் மாற்று நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. மேலும், டாக்காவில் இருந்து புறப்படவிருந்த விமானங்களும் இரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். அதேவேளை, தீ விபத்தில் உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.