யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பகிடிவதை குற்றச்சாட்டில் கைதான 19 மாணவர்களையும் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 29ஆம் திகதி பல்கலைக்கழகத்திற்குள் வெளியிலுள்ள வீடொன்றுக்கு கனிஷ்ட மாணவர்களை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 19 சிரேஷ்ட மாணவர்கள் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில் குறித்த வழக்கு நேற்று (12) வெள்ளிக்கிழமை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது 19 மாணவர்களையும் தலா ஒரு இலட்ச ரூபாய் சரீர பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளதுடன், குறித்த வழக்கு எதிர்வரும் ஜனவரி 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.