நோர்த் யார்க் மோதல் சம்பவத்தின் பின்னர் கொலைக் குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த பெண் கைது

நோர்த் யார்க் (North York) பகுதியில் நபர் ஒருவர் மீது வாகனம் மோதிய மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, கொலைக் குற்றச்சாட்டின் கீழ் தேடப்பட்டு வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் கடந்த ஜூன் 14ஆம் திகதி காலை 6 மணியளவில் கீல் வீதி (Keele Street) மற்றும் வில்சன் அவென்யூ (Wilson Avenue) பகுதிக்கு அருகில் நிகழ்ந்துள்ளது.

அப்பகுதியில் ஒரு குழுவினருக்கு இடையே மோதல் ஏற்பட்ட போது, டொராண்டோவைச் சேர்ந்த 32 வயதுடைய எரிக் சபார் (Erik Safar) என்பவர் தாக்கப்பட்டு, அவர் மீது வாகனம் மோதியதாகப் பொலிஸார் முன்னதாகத் தெரிவித்திருந்தனர். சம்பவ இடத்திலேயே அவருக்கு அவசர உயிர் காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்தக் கொலைச் சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஹமில்டனைச் சேர்ந்த 18 வயதுடைய மிலன் ஆண்ட்ராஸ் பாபோஸ் (Milan Andras Babos) மற்றும் டொராண்டோவைச் சேர்ந்த 23 வயதுடைய ரிச்சர்ட் ஓலா (Richard Olah) ஆகியோர் பொலிஸாரிடம் சரணடைந்ததுடன், அவர்கள் இருவர் மீதும் இரண்டாம் நிலை கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது.

இருப்பினும், இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய டொராண்டோவைச் சேர்ந்த 25 வயதுடைய ஜெனிபர் ஓலா (Dzsenifer Olah) என்ற பெண்ணையும் தலாங்கள் தேடி வருவதாகக் கடந்த வாரம் பொலிஸார் ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்திருந்தனர்.

திங்கட்கிழமை காலை வெளியிடப்பட்ட புதிய தகவலின்படி, ஜெனிபர் ஓலா கடந்த வார இறுதியில் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாகவும், அவர் மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றம் (Second-degree murder) சுமத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

“இந்த விசாரணைக்கு ஆதரவளித்த பொதுமக்களுக்குப் புலனாய்வாளர்கள் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார்கள்” எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது

sa

சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி!

October 11, 2026

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் அமரும் முனையப் பகுதி மீது

thriuvu

திருவள்ளுவர் பண்பாட்டு மைய நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் முதலாவது கூட்டம்

October 11, 2026

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை எதிர்காலத்தில் முறையாக நிர்வகித்து, அதன் செயற்பாடுகளைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள

ind

Toronto இந்தியத் துணைத் தூதரகத்தால் ‘கனடாவில் இந்தியப் பெண்களுக்கு அதிகாரத்தை வழங்குதல்’ கருத்தரங்கு

October 11, 2026

கனடாவில் உள்ள இந்தியப் பெண்களுக்குக் கிடைக்கும் ஆதரவு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பெண்கள், சமூக அமைப்புகள், சட்ட மற்றும்

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,