கடந்த மாதம் வடக்கு நைஜீரியாவிலுள்ள கத்தோலிக்க பாடசாலையொன்றில் அத்துமீறி நுழைந்த ஆயுதக் குழுவினர் கடத்தி சென்ற நூற்றுக்கணக்கான மாணவர்களில் மேலும் 100 மாணவர்கள்விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விடுவிக்கப்பட்ட 100 மாணவர்கள் நைஜீரியாவின் தலைநகரான அபூஜாவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை நைஜர் மாநில உள்ளூர் அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், விடுவிக்கப்பட்ட 100 மாணவர்களும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன், பின்னர் குடும்பத்துடன் மீண்டும் இணைக்கப்படுவார்கள் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நைஜர் மாநிலத்தின் அகவாரா மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க பாடசாலையில் கடந்த மாதம் வெள்ளிக்கிழமை (21) அததுமீறி நுழைந்த ஆயுதக் குழுவினர் 303 மாணவர்கள் மற்றும் 12 ஆசிரியர்களை கடத்தி சென்றனர்.
இதில் 10 முதல் 18 வயதிற்குட்பட்ட ஆண் மற்றும் பெண் மாணவர்கள் அடங்குவதாக அந்நாட்டு கிறிஸ்துவ சங்கம் தெரிவித்தது. கடத்தப்பட்ட மாணவர்களில் 50 பேர் தப்பி சென்று அவர்களின் குடும்பத்துடன் சேர்ந்துள்ளனர்.
மேலும் 153 மாணவர்கள் மற்றும் 12 ஆசிரியர்கள் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.