நுவரெலியா கிரகறி வாவி பகுதியில் சிசுவொன்றின் சடலம் கிடப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் சிசுவின் சடலத்தை மீட்டுள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (01) காலை இடம்பெற்றுள்ளது.
சிசுவின் சடலம் எவ்வாறு அங்கு வந்தது, சிசு எவ்வாறு இறந்தது, சிசு யாருடையது என்பது தொடர்பாக நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிசுவின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் உள்ள சவகிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.