நுவரெலியாவில் பேஸ்புக் களியாட்டம் நிகழ்வு ; போதைப்பொருளுடன் 30 பேர் கைது!

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா – கிரகரி வாவிக்கு அருகில் நான்காவது வாகனத் தரிப்பிடத்தில் நடைபெற்ற பேஸ்புக் களியாட்ட நிகழ்வொன்றை சுற்றிவளைத்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது போதைப்பொருட்களுடன்30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பேஸ்புக் களியாட்டம் நிகழ்வு சனிக்கிழமை (18) காலை ஆரம்பிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (19) அதிகாலை வரையில் நடைபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விசேட தேடுதல் நடவடிக்கைகள் நுவரெலியா பிரதான நகரிக்குள் நுழையும் அனைத்து பிரதான வீதிகளையும் மறித்து சோதனைச் சாவடிகள் அமைத்து மோப்ப நாய்களின் துணையுடன் நடைபெற்றுள்ளது.

போதைப்பொருட்களுடன் பேஸ்புக் களியாட்ட நிகழ்வொன்று நடைபெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட குஷ் கஞ்சா, ஐஸ், சிகரெட்டுகள், போதைப்பொருள் மாத்திரைகள் மற்றும் மாவா உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்களைக் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் 18 முதல் 35 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் கம்பஹா, மட்டக்குளி, முகத்துவாரம், வெல்லம்பிட்டிய, மருதானை, கிராண்ட்பாஸ், பேலியகொடை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணையின் பின்னர் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்